Pages

Thursday, September 16, 2010

திருச்சிஆதிதிராவிடர் நலத் துறைக்கு | 2,905 கோடி நிதி ஒதுக்கீடு

அரியலூர், செப்.13:    கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத் துறைக்கு  | 2,905 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி.


அரியலூர் மாவட்டம், மணக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மணக்கால், குழுமூர் மற்றும் வெட்டியார்வெட்டு கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பல்நோக்கு மையக் கட்டடங்களைத் திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவர் மேலும் பேசியது:
    
திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஆதிதிராவிடர் நல மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
    
ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர்களுக்காக அடிப்படைக் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு வசதிகளுக்காக | 50 கோடியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆதிதிராவிடர் மாணவர்களும் தனியார் பள்ளிகளிலும் படிக்கும் வகையில், மாவட்டத்துக்கு 10 பேர் வீதம் அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்குத் தேவையான நிதியை அரசு வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதற்காக மட்டும் | 3.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தனியார் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் அரசு நிதியுதவி செய்கிறது. பிளஸ் 2 வரை அவர்களுக்கு அரசே தேவையான உதவியை செய்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் | 3.17 கோடி இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றார் அமைச்சர் தமிழரசி.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாளை. து. அமரமூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

0 comments:

Post a Comment