Tuesday, September 10, 2013
பெரம்பலூர்-திருமானூரில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
பெரம்பலூர்
பெரம்பலூர் மற்றும் திருமானூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட காங்கிஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையத்தில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்தர்ஹெல்லர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் நகரத்தலைவர் ஆர்.மதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நகர துணைத்தலைவர்கள் இந்திராணி, ஏ.எஸ்.சாதிக்பாட்சா, கவுல்பாளையம் திவ்யநாதன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜ்குமார், வட்டார செயலாளர் வீரமுத்து, பூபதி, எசனை ரெங்கராஜ், ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமானூர்
திருமானூர் அருகே உள்ள அரண்மனைக்குறிச்சி கிராம த்தில் முன்னாள் மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.அமரமூர்த்தி தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சிக்கு அரியலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், வட்டார பொறுப்பாளர்கள் கோபி, குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டார துணைத் தலைவர்ராகவன், திருமழபாடி ஊராட்சி துணைத்தலைவர் இளைய ராஜா, ஒன்றியக்குழு உறுப் பினர் கல்யாணசுந்தரம், மற்றும் இமான், சக்திவேல், பாபு, ஞானஜோதி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண் டனர்
