Thursday, December 30, 2010
சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு
Thursday, December 23, 2010
அரியலூரில் புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்
அரியலூரில் டிச. 26-ல் மாநில அளவிலான ஹாக்கி
Wednesday, December 15, 2010
Minister assures assistance from Centre for rain-affected farmers
Minister assures assistance from Centre for rain-affected farmers
Sharing the concern:Farmers showing damaged paddy crop to G.K.Vasan, Union Minister for Shipping, at Vilangudi village near Thiruvaiyaru on Friday.
THANJAVUR: The Central government will extend its assistance, once it receives the rain damage assessment report from the State government, said Union Minister for Shipping G.K.Vasan, at Vilankudi village near Thiruvaiyaru on Friday.
He was inspecting the inundated paddy fields at the village. Later, he told reporters that the damage was extensive and paddy crops on nearly four lakh acres have been submerged in the Cauvery delta districts of Thanjavur, Tiruvarur and Nagapattinam. The rain was torrential in coastal districts and infrastructure facilities such as roads have been badly hit. Loss of human life and those of cattle have also been reported.
It is for the Tamil Nadu government to provide immediate and necessary relief to the affected people. "In view of the alarming weather forecast by the meteorological department and as there is every likelihood of rain continuing, the State government should take all precautionary measures and rush relief to people," Mr.Vasan said. On the possibility of a central team visiting the State, the Minister said "The Central government's help would depend on the magnitude of the damage and if the State government wanted it."
Mr.Vasan said that he would inspect the rain damage in Ariyalur and Perambalur districts on his way to Chennai on Friday. The Minister was accompanied by G.Rangaswamy Moopanar and Suresh Moopanar, AICC members; Amaramurthy MLA; M.Ramkumar former MLA and Nanji Varadarajan, Thanjavur South district president of the party.
Thanks to : The Hindu
Sunday, December 5, 2010
கணக்கீடு அடிப்படையில் மத்திய அரசு உதவும்
பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு
சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி கட்டடங்களைத் திறந்துவைத்தார். சகாயமாதா மருத்துவமனை பங்குத் தந்தை தங்கசாமி, புள்ளம்பாடி முதன்மை குரு வின்சென்ட் பெரர், ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பள்ளித் தாளாளர் துரைராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் மெரினாமேரி நன்றி கூறினார்
தஞ்சாவூர்- அரியலூர் இடையிலான சாலையை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு
தஞ்சை மாவட்டம், திருவையாறு மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது, அமைச்சரிடம் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி அளித்த மனு:
மானாமதுரை - பெரம்பலூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தஞ்சாவூர் முதல் அரியலூர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் இதுவரை நடைபெறவில்லை.
ஏற்கெனவே மோசமாக இருந்த சாலை அண்மையில் பெய்த மழையால் மேலும் மோசமடைந்துவிட்டது. எனவே, உடனடியாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அமரமூர்த்தி கூறியிருந்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியது:
மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை - அரியலூர் இடையேயான சாலையைச் சீரமைக்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளியும் விடப்பட்டது. ஆனால், இந்தப் பணியை மேற்கொள்ள தனியார் எடுத்துள்ள ஒப்பந்தப்புள்ளியில் பணிகள் மேற்கொண்டால், அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்தப் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத்திடம் எடுத்துரைத்துள்ளோம். எனவே சாலை சீரமைக்கும் பணியில் முழு கவனம் செலுத்தி, விரைவில் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜி.கே.வாசன்.
அப்போது, காங்கிரஸ் பிரமுகர் ஜி.ஆர். மூப்பனார், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருமானூர் பகுதிகளில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிப்பு
மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார். விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.
திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு ஊராட்சித் தலைவர் கர்ணனும், கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசனும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மருதபாண்டியனும் தலைமை வகித்தனர்.
இந்தப் பள்ளிகளில் தனித்தனியே நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார். கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 மாணவிகளுக்கும், திருமழப்பாடி பள்ளியில் 65 மாணவ- மாணவிகளுக்கும், ஏலாக்குறிச்சி பள்ளியில் 97 மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாக்களில் திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாகரீகம், கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றன
Wednesday, December 1, 2010
Five soil testing centres planned
Special Correspondent
ARIYALUR: Soil testing centres with farm laboratories would be set up in five primary agricultural cooperative societies (PACS) soon in Ariyalur district under the National Agricultural Development Programme (NADP), said Collector T.K.Ponnusamy, here on Friday.
Presiding over the 57 {+t} {+h} all India cooperative week celebrations here, the Collector said agriculture service centres had been started in the PACS at Vadaveekam, Kallathoor, Keezhakaavattankurichi, Ponparapi, Tirumazhapadi, Keezhapazhur, Ambapur and Udayarpalayam.
He said one soil testing centre would be set up in each panchayat union. The Collector said PACS had disbursed crop loan to the tune of Rs.29.66 crore to 10,643 farmers in the district during the current year till the end of last month and wanted the farmers to repay their loans promptly and avail of interest concession announced by the government. He said Rs.1.54 crore had been disbursed as medium term loan by the co-operative societies and revolving fund of Rs.3.53 crore to 311 women self help groups. Mr Ponnusamy said the PACS were providing jewel loan and added the district central co-operative bank had provided Rs.20 lakh each to weak PACS for disbursing jewel loans. He said there were 401 fair price shops and essential commodities were being distributed to 3,29,353 family card holders.
Palai D.Amaramurthy, S.S.Sivasankar and K.Rajendran, MLAs of Ariyalur, Andimadam and Jayamkondam respectively, Kodiyarasi Duraisamy, district panchayat chairman, R.Pichai, District Revenue Officer and R.Ramamurthy, Regional Joint Registrar of Co-operative Societies spoke
Friday, September 24, 2010
Multipurpose buildings, development works inaugurated
Friday, September 17, 2010
பனங்கூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா
Thursday, September 16, 2010
ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி
திருச்சிஆதிதிராவிடர் நலத் துறைக்கு | 2,905 கோடி நிதி ஒதுக்கீடு
Tuesday, August 31, 2010
அரியலூர் தொகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் பணி நிறைவு
Friday, August 27, 2010
அரியலூரிலிருந்து வைப்பூர் கிராமத்துக்கு புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்
Thursday, August 19, 2010
Panchayat union school opened
அரசின் இலவச கலர் "டிவி' 95% வழங்கல்: எம்.எல்.ஏ., பெருமிதம்
புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி, மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அரியலூர் தொகுதிக்குள்பட்ட அயன்ஆத்தூர்- கிளிமங்களம்- அய்க்கால் வரை உள்ள சாலை, ஆனந்தவாடி கிளிமங்களம்-காவனூர்- அம்பாபூர் சாலை, அரியலூர்- ராவுத்தன்பட்டி- அயன்ஆத்தூர் இணைப்புச் சாலை, ராயம்புரம்- காவேரி பாளையம்- கடுகூர் வரை உள்ள சாலை, மணக்கால்- வெண்மணி இணைப்புச் சாலை, கோவிந்தாபுரம்- மணக்கால்- நல்லாம்பத்தை- ஓ.கூத்தூர் வரையுள்ள இணைப்புச் சாலை, ஓட்டக்கோயில்- சாளையக்குறிச்சி- காவேரிபாக்கம் வரை உள்ள சாலை, அரியலூர்- அம்மாக்குளம்- பொய்யூர் வரையிலான சாலை, குறிச்சிநத்தம்- புதுப்பாளையம் சாலை, கோப்பிலியன்குடிகாடு- பெரியநாகலூர் சாலை, சீனிவாசபுரம்- மொரக்குழி- பொய்யூர் வரையிலான சாலை ஆகிய கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து, புதிய சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்துத் தர வேண்டும். கல்லகம்- திருமழபாடி சாலையில் வெங்கனூர்- கோவில்எசனை கிராமங்களுக்கிடையில் உள்ள ஆண்டி ஓடைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர வேண்டும். அரியலூர் தொகுதிக்குள்பட்ட பழைய மாவட்ட சாலைகளான மேலக்கருப்பூர்- ஏலாக்குறிச்சி சாலை, மேலக்கருப்பூர்- விழுப்பனாங்குறிச்சி சாலை, அரியலூர்- பொய்யூர் சாலை, பொய்யூர்- சுண்டக்குடி சாலை உள்ளிட்ட சாலைகளை பிரதான மாவட்டச் சாலைகளாக தரம் உயர்த்தி இருவழிப் பாதைகளாக மாற்ற வேண்டும். அரியலூர் தொகுதியில் உள்ள 5 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள ஒன்றியச் சாலைகள் அனைத்தையும், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சேர்த்து மேம்பாடு செய்ய வேண்டும். அரியலூர் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய சாலைகளான சுண்டக்குடி- ஓரியூர் சாலை, சுண்டக்குடி- சிலுப்பனூர் சாலை, அரியலூர்- முட்டுவாஞ்சேரி சாலை, திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செம்மந்தங்குடி செல்லும் சாலை, பொய்யூர்- சுண்டக்குடி- வைப்பம் செல்லும் சாலை, கருவிடைச்சேரி செல்லும் சாலை, ஓட்டக்கோயில்- ஓ.கூத்தூர் செல்லும் சாலை, அரியலூர்- ஒ.கூத்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளை நெடுஞ்சாலைத் துறையின் கீழ் எடுத்து மேம்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்











