Pages

Tuesday, August 31, 2010

அரியலூர் தொகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் பணி நிறைவு

அரியலூர், ஆக. 30: அரியலூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 71 ஊராட்சிகளில் 60 ஆயிரம் பேருக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் து. அமரமூர்த்தி தெரிவித்தார்

அரியலூர் அருகேயுள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 434 பேருக்கு இலவச கலர் டிவிக்களை வழங்கி, சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி பேசியது:

அரியலூர் தொகுதியைச் சேர்ந்த 71 கிராம ஊராட்சிகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூர் நகராட்சியில் மூன்று வார்டுகளுக்கு மட்டும் இன்னும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்  வழங்கப்படாமல் உள்ளது. அங்கும் விரைவில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றார் அவர்

விழாவில் திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், துணைத் தலைவர் இரா. கென்னடி, வட்ட வழங்கல் அலுவலர் எம்.எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் பேசினர். 

இதில் ஊராட்சி உறுப்பினர்கள் க. முத்தையன், இரா. ஞானசேகரன், இரா. காமாட்சி, ந. சாமிதுரை, சி. பாஸ்கர் ஊராட்சி உதவியாளர் யா. பாக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊராட்சித் தலைவர் வீ. அன்னலட்சுமி வரவேற்றார். துணைத் தலைவர் எம். சுந்தரி நன்றி கூறினார்.

Friday, August 27, 2010

அரியலூரிலிருந்து வைப்பூர் கிராமத்துக்கு புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

அரியலூர்: அரியலூரிலிருந்து வைப்பூர் கிராமத்துக்கு புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கவிழா நடந்தது. அரியலூரிலிருந்து திருமானூர் பஞ்.,யூனியனுக்குட்பட்ட கடைகோடி கிராமம் வைப்பூருக்கு, கீழப்பழுவூர், கோவிலூர், செட்டிக்குழி, வாண்டராயன்கட்டளை, காமரசவல்லி, குருவாடி வழியாக வைப்பூர் வரை செல்லும் புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கவிழா, செட்டிக்குழி மற்றும் காமரசவல்லி கிராமங்களில், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர்கள் கோவிலூர் பன்னீர்செல்வம், காமரசவல்லி சுப்ரமணியன் வரவேற்றனர்.

செட்டிக்குழி கிராமத்தில் உள்ள துவக்கபள்ளி வளாகத்தில் புதிய வழித்தட பஸ் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்த, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது: நான் கடந்த 96ம் ஆண்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மிகவும் பின்தங்கிய நிலையில் குக்கிராமமாக இருந்த இந்த, செட்டிக்குழி கிராமத்தின் சாலை மேம்பாட்டுக்காக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தார் சாலை அமைக்க வழிவகை செய்தேன். அதன்பிறகு இந்த கிராமத்துக்கு எல்லா மேம்பாட்டு பணியும் கிடைக்கப்பெற்றது. கோவிலூர் பஞ்சாயத்து தலைவரின் கோரிக்கை படி, இதே வழித்தடத்தில் செட்டிக்குழி வழியாக தஞ்சாவூர் செல்லும் வகையிலும் புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்க, தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் நேருவை விரைவில் சந்தித்து பேசி ஆவன செய்வேன்.

கடந்த நான்கரை ஆண்டில் அரியலூர் தொகுதியில் உள்ள எல்லா ஊர்களிலும் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள ஏலாக்குறிச்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், அரியலூர் வடக்கு ஒன்றியத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அரசு போக்குவரத்து கழகத்தின் அரியலூர் கிளை மேலாளர் ராமநாதன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், துணை தலைவர் கென்னடி, ஒன்றியக்குழு தலைவர்கள் உத்ராபதி, ரெங்கராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் குருவாடி வீரரவி, தூத்தூர் காமராஜ், தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜராஜன், அரியலூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பனங்கூர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Thursday, August 19, 2010

Panchayat union school opened

Special Correspondent
ARIYALUR: The government schools functioning in the state possessed efficient teachers and the parents should take advantage of the same for building a bright career for their wards, said the District Collector, T. Abraham here on Friday.

The private schools take care in admitting only bright boys with an eye on the public exam results. But government schools admit even those who are poor in studies. The teachers of the government schools leave no stone unturned in motivating and imparting training to these students to secure high marks in the public examinations. The parents and their wards in government schools should understand this fact, Mr. Abraham said while speaking at a function to inaugurate a new panchayat union elementary school in Vannarapettai village in Karuppilakattai panchayat.

To drive his point home, he cited the example of a girl student of the school run by Tirunelveli Corporation securing state first rank in the SSLC exams last academic years (2009-10). The parents should meet the teachers regularly to follow the progress made by their wards in studies, he said.

The government had accorded sanction for starting three panchayat union middle schools in the district and the other two schools will soon be started in Valajanagaran Rajiv Nagar and Senthurai Ambedkar Nagar. Further four government elementary schools will soon be upgraded into middle schools in the district, he added.

Palai D.Amaramoorthy, MLA, Arivazhagan, district panchayat councillor, Jalalakshmi Viswanathan, president of the Karuppilakattalai panchayat, Jothivel, district elementary education officer and others spoke.

அரசின் இலவச கலர் "டிவி' 95% வழங்கல்: எம்.எல்.ஏ., பெருமிதம்

அரியலூர்: அரியலூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட, சுப்ராயபுரம் மற்றும் காவனூர் பஞ்சாயத்தில் நடந்த தமிழக அரசின் இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவுக்கு, தாலுகா வழங்கல் அலுவலர்(பொறுப்பு) தண்டபாணி தலைமை வகித்தார்.சுப்ராயபுரம் பஞ்சாயத்து தலைவர் வேம்பு கொளஞ்சியப்பன், காவனூர் பஞ்சாயத்து தலைவர் சூரியகாந்தி கலியபெருமாள் வரவேற்றனர்.

சுப்ராயபுரம் பஞ்.,க்குட்பட்ட குடும்பங்களுக்கான 906 "டிவி' மற்றும் காவனூர் பஞ்.,க்குட்பட்ட 925 "டிவி' வழங்கி, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது:அரியலூர் சட்டசபை தொகுதியில் இதுவரை 58 ஆயிரத்து 855 "டிவி' வழங்கப்பட்டுள்ளது. சுப்ராயபுரம் மற்றும் காவனூர் பஞ்சாயத்தில் இப்போது வழங்கப்படும் "டிவி'யுடன், அரியலூர் பஞ்., யூனியனில் உள்ள அனைத்து பஞ்.,லும் "டிவி' வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது. திருமானூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட பார்பனச்சேரிக்கு மட்டும் "டிவி' வழங்க வேண்டியுள்ளது.அரியலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு சில வார்டு பயனாளிக்கான 5,800 "டிவி' உள்பட, அரியலூர் சட்டசபை தொகுதியில் இன்னும் 9,000 "டிவி' மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி அரியலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 95 சதவீத மக்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சதவீத குடும்பத்துக்கும் அடுத்த மாதம் "டிவி' வழங்கப்பட்டு விடும்.அடுத்ததாக இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

சுப்ராயபுரம் பஞ்சாயத்துக்கு காஸ் அடுப்பு வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பகுதி நேர ரேஷன்கடை அமைக்கப்பட்டுள்ளது. அதை முழுநேர ரேஷன் கடையாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், மாவட்ட பஞ்.,கவுன்சிலர் அறிவழகன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், துணை தலைவர் வேம்பு கொளஞ்சிநாதன், பஞ்சாயத்து கிளர்க் காசிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், இளைஞர் காங்கிரஸ் லோக்சபா தொகுதி தலைவர் சுப சுந்தரசோழன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோவிந்தராஜ், வட்டார காங்கிரஸ் இளைஞர் அணி துணை தலைவர் பொய்யூர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்

அரியலூர்,​​ மார்ச் 8: ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட 12 கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று அரியலூர் தொகுதி ​ சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
​ ​ ​ ​ இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி,​​ மாநில நெடுஞ்சாலைத் துறை ​ அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த கோரிக்கை ​ மனுவில் கூறியிருப்பதாவது:
​ ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ​ அயன்ஆத்தூர்-​ கிளிமங்களம்-​ அய்க்கால் வரை உள்ள சாலை,​​ ஆனந்தவாடி கிளிமங்களம்-காவனூர்-​ அம்பாபூர் சாலை,​​ அரியலூர்-​ ராவுத்தன்பட்டி-​ அயன்ஆத்தூர் இணைப்புச் ​ சாலை,​​ ராயம்புரம்-​ காவேரி பாளையம்-​ கடுகூர் ​ வரை உள்ள சாலை,​​ மணக்கால்-​ வெண்மணி இணைப்புச் சாலை,​​ கோவிந்தாபுரம்-​ மணக்கால்-​ நல்லாம்பத்தை-​ ஓ.கூத்தூர் வரையுள்ள இணைப்புச் ​ சாலை,​​ ஓட்டக்கோயில்-​ சாளையக்குறிச்சி-​ காவேரிபாக்கம் வரை உள்ள சாலை,​​ அரியலூர்-​ அம்மாக்குளம்-​ பொய்யூர் வரையிலான சாலை,​​ குறிச்சிநத்தம்-​ புதுப்பாளையம் சாலை,​​ கோப்பிலியன்குடிகாடு-​ பெரியநாகலூர் சாலை,​​ சீனிவாசபுரம்-​ மொரக்குழி-​ பொய்யூர் வரையிலான சாலை ஆகிய கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்துத் தர வேண்டும்.
​ ​ ​ ​ கல்லகம்-​ திருமழபாடி சாலையில் ​ வெங்கனூர்-​ கோவில்எசனை கிராமங்களுக்கிடையில் உள்ள ஆண்டி ஓடைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.​ ​ இந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர வேண்டும்.
​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட பழைய ​ மாவட்ட சாலைகளான மேலக்கருப்பூர்-​ ஏலாக்குறிச்சி சாலை,​​ மேலக்கருப்பூர்-​ விழுப்பனாங்குறிச்சி சாலை,​​ அரியலூர்-​ பொய்யூர் சாலை,​​ ​ பொய்யூர்-​ சுண்டக்குடி சாலை உள்ளிட்ட சாலைகளை பிரதான மாவட்டச் சாலைகளாக ​ தரம் உயர்த்தி இருவழிப் பாதைகளாக மாற்ற ​ வேண்டும்.
​ ​ ​ அரியலூர் தொகுதியில் உள்ள 5 கி.மீ.​ தொலைவுக்கு மேல் உள்ள ஒன்றியச் சாலைகள் ​ அனைத்தையும்,​​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சேர்த்து மேம்பாடு செய்ய வேண்டும்.
​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ​ ஒன்றிய சாலைகளான சுண்டக்குடி-​ ஓரியூர் சாலை,​​ சுண்டக்குடி-​ சிலுப்பனூர் சாலை,​​ ​ அரியலூர்-​ முட்டுவாஞ்சேரி சாலை,​​ திருச்சி-​ சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செம்மந்தங்குடி செல்லும் சாலை,​​ பொய்யூர்-​ சுண்டக்குடி-​ வைப்பம் செல்லும் சாலை,​​ ​ கருவிடைச்சேரி செல்லும் சாலை,​​ ஓட்டக்கோயில்-​ ஓ.கூத்தூர் செல்லும் சாலை,​​ அரியலூர்-​ ஒ.கூத்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளை ​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் எடுத்து மேம்பாடு செய்ய வேண்டும் என்று அவர் ​ கேட்டுக்கொண்டுள்ளார்

இலவச கலர் "டிவி' வழங்கும் விழா

அரியலூர்: அரியலூர் அருகே, மேலக்கருப்பூர் பஞ்சாயத்தை சேர்ந்த கருவிடச்சேரி கிராமத்தில் நடந்த, தமிழக அரசின் இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவுக்கு, டி.ஆர்.ஓ., பிச்சை தலைமை வகித்தார். பஞ்., தலைவி ராதா கிருஷ்ணவேணி பாலசுப்ரமணியன் வரவேற்றார். மேலக்கருப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 1,381 குடும்பங்களுக்கான தமிழக அரசின் இலவச கலர் "டிவி'க்களை, எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி வழங்கி பேசினார். விழாவில், மண்டல துணை தாசில்தார் கதிரவன், ஆர்.ஐ., கோவிந்ராஜ், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், மாவட்ட பஞ்., கவுன்சிலர் அறிவழகன், பொய்யூர் இளங்கோவன், மேலக்கருப்பூர் பஞ்சாயத்து துணை தலைவர் மாரியாயி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

பஞ்.,யூனியன் துவக்க பள்ளி திறப்பு விழா

அரியலூர்: அரியலூர் ராஜீவ்நகரில் பஞ்.,யூனியன் துவக்கப்பள்ளி திறப்பு விழா நடந்தது. அரியலூர் அருகே வாலாஜாநகரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ராஜீவ் நகருக்கு, தமிழக அரசு சார்பில் நடப்பு கல்வியாண்டில் அறிவிக்கப்பட்ட பஞ்.,யூனியன் துவக்கபள்ளிக்கான தொடக்கவிழா மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்து திறந்து வைத்தார்.

அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் சி.இ.ஓ., கார்த்தியாயிணி, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் ஜோதிலெட்சுமி பவுன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன், வாலாஜாநகரம் பஞ்சாயத்து தலைவர் தெய்வ இளையராஜன், உதவி தொடக்க கல்வி அலுவலர் கருணாநிதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் தேத்ரவு ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புகைப்பட செய்திகள்




Posted by Picasa

முதல் பதிவு

அரியலூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு. பாளை அமரமூர்த்தி அவர்கள் புகழ்பாடும் வலைபதிவு. இந்த வலைபதிவு ஒரு அதிகாரபூர்வமற்ற வலைபதிவு. அவரின் தொண்டனால் நடத்தபடுகிறது. வலைபதிவில் வரும் செய்திகளுக்கும் சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு. பாளை அமரமூர்த்தி அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.