Pages

Thursday, December 30, 2010

சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

அரியலூர், டிச. 29: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் அருள்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று, 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியது:

மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அதற்காக நிதியை ஒதுக்கியுள்ளது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார் அமரமூர்த்தி.

விழாவில் குருவாடி ஊராட்சித் தலைவர் வீர. ரவி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் பொதுச் செயலர் தேவர், கோபி உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

Thursday, December 23, 2010

அரியலூரில் புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

அரியலூர்: அரியலூரில் இரண்டு புதிய வழித்தடங்களுக்கான பஸ் போக்குவரத்து துவக்கவிழா நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, அரியலூரிலிருந்து திருவையாறு வரை நான்குமுறை சென்று வரும் வகையிலான, புதிய வழித்தட டவுன்பஸ் மற்றும் விக்கிரமங்கலம் வழிகாக கொலையனூர் வரை சென்றுவரும் டவுன்பஸ் உள்ளிட்ட புதிய வழித்தட டவுன்பஸ் போக்குவரத்து துவக்கவிழாவுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கோட்ட மேலாளர் சங்கர் தலைமை வகித்தார். அரியலூர் கிளை மேலாளர் ராமநாதன் வரவேற்றார்.

புதிய வழித்தட டவுன் பஸ் போக்குவரத்தை, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், அரியலூர் நகராட்சி துணை தலைவர் சுப்ரமணியன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் சாத்தமங்கலம் ராமையன், பெரியதிருக்கோணம் செல்வி இளங்கோவன், குருவாடி வீரரவி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பழனி, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

அரியலூரில் டிச. 26-ல் மாநில அளவிலான ஹாக்கி

அரியலூர், டிச. 21: அரியலூரில் பசுபதி நினைவு ஹாக்கி கழகம், டாக்டர் எம். அப்துல் சாதிக் நினைவுக் கழகம் ஆகியவை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கி போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஹாக்கி கழகத்தின் தலைவரும், பசுபதி நினைவு ஹாக்கி கழகத்தின் தலைவருமான எம். ஞானமூர்த்தி திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரியலூர் உயர்நிலைப் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்த  அருணாசலம் (எ) பசுபதி நினைவாக கடந்த 1974 ஆம் ஆண்டு அவரது பெயரைக்  கொண்டு ஹாக்கி கழகம் தொடங்கப்பட்டது.
1994 முதல் 2001 ஆம் ஆண்டு வரை பசுபதி நினைவு ஹாக்கி கழகம் சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சில ஆண்டுகள் தொடர்ந்து போட்டிகளை நடத்த முடியவில்லை என்றாலும்,  தற்போது 9-வது ஆண்டாக மாநில அளவிலான ஹாக்கி போட்டியை நிகழாண்டு  நடத்துகிறோம்.  டிசம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும்.

இந்தப் போட்டியில் தெற்கு ரயில்வே அணி, தமிழக காவல் துறை அணி, மதுரை திருநகர் ஸ்போர்ட்ஸ் கிளப், பாளையங்கோட்டை ஜோதி ஹாக்கி கிளப், சென்னையிலுள்ள இந்திய உணவுக் கழக அணி, ஐ.சி.எப். அணி, மதுரை ரிசர்வ் லைன் அணி, உடுமலைப்பேட்டை அணி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, வாடிப்பட்டி எவர்கிரீன் ஹாக்கி கிளப், இந்திய விளையாட்டு ஆணைய அணி, சென்னை பாரத ஸ்டேட் வங்கி அணி, சென்னை ஏ.ஜி.ஓ.எஸ். அணி மற்றும் அரியலூர் பசுபதி நினைவு ஹாக்கி கழக அணி என மொத்தம் 16 அணிகள்  பங்கேற்கின்றன.

 டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோதா போட்டியைத் தொடக்கிவைக்கிறார். தினமும் 4 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இறுதிப் போட்டி டிசம்பர் 30 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மழை பெய்யும் பட்சத்தில் போட்டிகளை மாற்று இடத்தில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளையும்  செய்துள்ளோம். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


போட்டி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், பாளை து. அமரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார் ஞானமூர்த்தி.

பேட்டியின் போது, போட்டிச் செயலர் வி. யோகநாதன், ஒருங்கிணைப்பாளர் என். பாரதிதாசன், ஹாக்கி கழகச் செயலர் டி. குணசேகரன், ஹாக்கிப் பயிற்சியாளர் என். லெனின்,எஸ். ஜபருல்லா, அரியலூர் மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலர் சின்னப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Wednesday, December 15, 2010

Minister assures assistance from Centre for rain-affected farmers

Minister assures assistance from Centre for rain-affected farmers

 

Sharing the concern:Farmers showing damaged paddy crop to G.K.Vasan, Union Minister for Shipping, at Vilangudi village near Thiruvaiyaru on Friday.

 

THANJAVUR: The Central government will extend its assistance, once it receives the rain damage assessment report from the State government, said Union Minister for Shipping G.K.Vasan, at Vilankudi village near Thiruvaiyaru on Friday.

 

He was inspecting the inundated paddy fields at the village. Later, he told reporters that the damage was extensive and paddy crops on nearly four lakh acres have been submerged in the Cauvery delta districts of Thanjavur, Tiruvarur and Nagapattinam. The rain was torrential in coastal districts and infrastructure facilities such as roads have been badly hit. Loss of human life and those of cattle have also been reported.

 

It is for the Tamil Nadu government to provide immediate and necessary relief to the affected people. "In view of the alarming weather forecast by the meteorological department and as there is every likelihood of rain continuing, the State government should take all precautionary measures and rush relief to people," Mr.Vasan said. On the possibility of a central team visiting the State, the Minister said "The Central government's help would depend on the magnitude of the damage and if the State government wanted it."

 

Mr.Vasan said that he would inspect the rain damage in Ariyalur and Perambalur districts on his way to Chennai on Friday. The Minister was accompanied by G.Rangaswamy Moopanar and Suresh Moopanar, AICC members; Amaramurthy MLA; M.Ramkumar former MLA and Nanji Varadarajan, Thanjavur South district president of the party.

 

Thanks to : The Hindu

 

Sunday, December 5, 2010

கணக்கீடு அடிப்படையில் மத்திய அரசு உதவும்

தஞ்சாவூர்: திருவையாறு தியாகபிரம்ம மகோத்சவ சபை உதவி செயலாளர் பருத்திக்குடி மனோகரன் மனைவி இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன், மழை பாதித்த பகுதியை பார்வையிட்டார். தஞ்சை மாவட்டம் விளாங்குடி கிருஷ்ணதாஸ் என்பவர் வயலுக்குள் இறங்கி பயிர் சேதத்தை பார்வையிட்ட வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் விவசாயம், வீடு, குடிசை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ஏக்கர் பயிர் மூழ்கியுள்ளது. நெற்பயிர்கள் பல இடங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர் வடியாமல் உள்ளதால், பயிர்கள் அழுகும் சூழல் உள்ளது.

மேட்டூர் அணை, வீராணம் ஏரி போன்றவை நிரம்பியுள்ளன. தமிழக அரசு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகிறது. மழையால் இறந்தவர்கள், வீடு பாதிப்புக்கு பல நிலைகளில் இழப்பீடு, நிவாரணம் வழங்கப்படுகிறது. மழைநீர் முழுமையாக வடிந்ததும் நெற்பயிர் சேதம், சாலை, ஆறு, வீடு போன்ற குறித்து அரசு கணக்கெடுப்பு செய்யும் என நம்புகிறோம். மழை தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்றுள்ள நிலையை அரசு கவனித்து வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்பை தடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

அரசு கணக்கீடு செய்யும் சேதத்தின் அடிப்படையில் மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். காவிரி பிரச்னையில் மத்திய அரசு மக்களின் நிலையை பிரதிபலிக்கும் வகையில் செயல்படும். தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுத்தர முயலும். தமிழக காங்கிரஸ், இங்குள்ள மக்களின் எண்ணத்தை மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர்களிடமும் தொடர்ந்து கூறி வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பெற்றுத்தருவார்கள். தஞ்சை - பெரம்பலூர் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்பட்டு, இதனை சீரமைக்க மத்திய அரசு 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான டெண்டர் மாநில அரசு மூலம் விடப்பட்டபோது, இத்தொகையைவிட கூடுதலாக தொகையை தனியார் நிறுவனங்கள் எதிர்பார்த்ததால் மறுடெண்டர் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி டில்லி வந்து, நானும் அவரும் சேர்ந்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத்திடம் இப்பிரச்னை குறித்து பேசி, விரைவில் மறுடெண்டர் விட்டு பணியை துவங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இங்கிருந்து நான் சென்னை செல்லும் வழியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு செல்கிறேன். எங்கள் இயக்கத்தினர் ஆங்காங்கு இதற்காக காத்துள்ளனர்.<BR>இவ்வாறு அவர் கூறினார். விளாங்குடி கிருஷ்ணதாஸ் என்பவரது ஒரு வயலை மட்டும் பார்வையிட்ட மத்திய அமைச்சர் வாசன் பேட்டியளித்தார். முன்னதாக அவரது கார் ரோட்டின் குறுக்கே நிறுத்தப்பட்டதால், பேட்டி, பேட்டியை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என 30 நிமிடங்களுக்கு மேல் முழுமையாக வாகனங்கள் இரு புறமும் நிறுத்தப்பட்டது.

தஞ்சை - பெரம்பலூர் ரோட்டில் இரு புறமும் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் நின்றது மக்களை எரிச்சல் அடையச் செய்தது.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரெங்கசாமி மூப்பனார், சுரேஷ்மூப்பனார், எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு

பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு

First Published : 29 Nov 2010 01:25:58 PM IST


அரியலூர், நவ. 28: திருமானூர் அடுத்த புதுப்பாளையம் ஆர்.சி. தூயமேரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

   சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை குடந்தை ஆயர் அந்தோணிசாமி புனிதம்  செய்தார்.

   சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி கட்டடங்களைத் திறந்துவைத்தார்.

  சகாயமாதா மருத்துவமனை பங்குத் தந்தை தங்கசாமி, புள்ளம்பாடி முதன்மை குரு  வின்சென்ட் பெரர், ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

  முன்னதாக, பள்ளித் தாளாளர் துரைராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் மெரினாமேரி நன்றி கூறினார்

தஞ்சாவூர்- அரியலூர் இடையிலான சாலையை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு

தஞ்சாவூர்- அரியலூர் இடையிலான சாலையை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு

First Published : 05 Dec 2010 01:47:23 PM IST


அரியலூர், டிச. 4: மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் - அரியலூர் இடையிலான சாலையைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசனிடம் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி கோரிக்கை மனு அளித்தார்.

   தஞ்சை மாவட்டம், திருவையாறு மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தார்.

   அப்போது, அமைச்சரிடம் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி அளித்த மனு:

   மானாமதுரை - பெரம்பலூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தஞ்சாவூர் முதல் அரியலூர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

   வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.    இந்தச் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் இதுவரை நடைபெறவில்லை.

   ஏற்கெனவே மோசமாக இருந்த சாலை அண்மையில் பெய்த மழையால் மேலும் மோசமடைந்துவிட்டது. எனவே, உடனடியாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அமரமூர்த்தி கூறியிருந்தார்.

   மனுவைப் பெற்றுக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியது:

   மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை - அரியலூர் இடையேயான சாலையைச் சீரமைக்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளியும் விடப்பட்டது.

   ஆனால், இந்தப் பணியை மேற்கொள்ள தனியார் எடுத்துள்ள ஒப்பந்தப்புள்ளியில் பணிகள் மேற்கொண்டால், அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்தப் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

   சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத்திடம் எடுத்துரைத்துள்ளோம். எனவே சாலை சீரமைக்கும் பணியில் முழு கவனம் செலுத்தி, விரைவில் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜி.கே.வாசன்.

   அப்போது, காங்கிரஸ் பிரமுகர் ஜி.ஆர். மூப்பனார், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருமானூர் பகுதிகளில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிப்பு

திருமானூர் பகுதிகளில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிப்பு

First Published : 05 Dec 2010 01:50:02 PM IST


அரியலூர், டிச. 4: அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சிவானந்தம் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி விழாவில் பங்கேற்று, 92 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசியது:

  மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.

 விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.

     திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு ஊராட்சித் தலைவர் கர்ணனும், கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசனும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மருதபாண்டியனும் தலைமை வகித்தனர்.

இந்தப் பள்ளிகளில் தனித்தனியே நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்  பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார்.

 கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 மாணவிகளுக்கும், திருமழப்பாடி பள்ளியில் 65 மாணவ- மாணவிகளுக்கும், ஏலாக்குறிச்சி பள்ளியில் 97 மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

  இந்த விழாக்களில் திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாகரீகம், கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றன

Wednesday, December 1, 2010

Five soil testing centres planned

Five soil testing centres planned

Special Correspondent

ARIYALUR: Soil testing centres with farm laboratories would be set up in five primary agricultural cooperative societies (PACS) soon in Ariyalur district under the National Agricultural Development Programme (NADP), said Collector T.K.Ponnusamy, here on Friday.


Presiding over the 57 {+t} {+h} all India cooperative week celebrations here, the Collector said agriculture service centres had been started in the PACS at Vadaveekam, Kallathoor, Keezhakaavattankurichi, Ponparapi, Tirumazhapadi, Keezhapazhur, Ambapur and Udayarpalayam.


He said one soil testing centre would be set up in each panchayat union. The Collector said PACS had disbursed crop loan to the tune of Rs.29.66 crore to 10,643 farmers in the district during the current year till the end of last month and wanted the farmers to repay their loans promptly and avail of interest concession announced by the government. He said Rs.1.54 crore had been disbursed as medium term loan by the co-operative societies and revolving fund of Rs.3.53 crore to 311 women self help groups. Mr Ponnusamy said the PACS were providing jewel loan and added the district central co-operative bank had provided Rs.20 lakh each to weak PACS for disbursing jewel loans. He said there were 401 fair price shops and essential commodities were being distributed to 3,29,353 family card holders.


Palai D.Amaramurthy, S.S.Sivasankar and K.Rajendran, MLAs of Ariyalur, Andimadam and Jayamkondam respectively, Kodiyarasi Duraisamy, district panchayat chairman, R.Pichai, District Revenue Officer and R.Ramamurthy, Regional Joint Registrar of Co-operative Societies spoke