Pages

Thursday, October 13, 2011

காங்கிரஸôர் விருப்ப மனு

அரியலூர், செப். 19: அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அந்தக் கட்சியினர் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்தனர்.

 

இதையொட்டி, அரியலூர் நீதிமன்றம் அருகிலுள்ள கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத் தலைவரும், சட்டபபேரவை முன்னாள் உறுப்பினருமான பாளை து. அமரமூர்த்தி தலைமை வகித்து, கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.

 

அரியலூர், ஜயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பதவிகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளுக்கு கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.

 

நிகழ்ச்சியில் கட்சியின் அரியலூர் நகரத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, செந்துறை ஒன்றியத் தலைவர் கொளஞ்சிநாதன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் குருமூர்த்தி, தா.பழூர் வட்டாரத் தலைவர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங். வேட்பாளர்களுக்காக முன்னாள் எம்எல்ஏ பாளை து. அமரமூர்த்தி பிரசாரம்

அரியலூர், அக். 9: உள்ளாட்சித் தேர்தலில் அரியலூர் ஒன்றியத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார் முன்னாள் எம்எல்ஏ பாளை து. அமரமூர்த்தி.

 

அரியலூர் தெற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பனங்கூர் கே. சுப்பிரமணியன், காவனூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் சே. செல்லக்கண்ணு உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  விளாங்குடி, காவனூர்ஒரத்தூர், காத்தான்குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்  பாளை து. அமரமூர்த்தி.

 

அவர் தனது பிரசாரத்தில், மாவட்டத்தை மீண்டும் புதிதாக உருவாக்கவும்,அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கொண்டு வந்ததற்கும், அரியலூர் நகரில் புதைச் சாக்கடைத் திட்டத்தை உருவாக்கவும் சட்டப்பேரவையில் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால்தான், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்ற முடிந்தது.  

 

மேலும், அரியலூர் தொகுதி மக்களின் 75 சதப் பணிகள் கடந்த 5 ஆண்டு ôலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

மக்கள் பிரச்னையைத் தீர்க்கப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.

 

இந்தப் பிரசாரத்தில் வேட்பாளர்கள் கே. சுப்பிரமணியன், செல்லக்கண்ணு, வெளிப்பிரிங்கியம் காமராஜ், ரெட்டிப்பாளையம் துரை. வரதராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள்  பழனிச்சாமி, சஞ்சய்காந்தி, கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.