Pages

Saturday, January 22, 2011

திருவையாறில் ஜன.21-ல் தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்

திருவையாறில் ஜன.21-ல் தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்       

 

தஞ்சாவூர், டிச. 29: திருவையாறில் ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபை சார்பில் சத்குரு தியாகராஜர் சமாதி உள்ள இடத்தில் ஜனவரி 21-ல் 164-வது ஆராதனை விழா தொடங்குகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் 1847 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி புஷ்ய பகுள பஞ்சமி தினத்தன்று திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் சித்தியடைந்தார்.

 

ராமனையே இரவு, பகலாக வணங்கி ஏராளமான கீர்த்தனைகளைப் பாடி நாட்டிற்கும் அர்ப்பணித்தவர் தியாகராஜர். அவரை நினைவுகூறும் வகையில், அவர் சமாதியாகியுள்ள இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 164-வது ஆராதனை விழா ஜனவரி 21 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பந்தல்கால் நடப்பட்டது.

 

அதில் பங்கேற்ற தியாக பிரம்மசபைத் தலைவர் ஜி.ஆர். மூப்பனார் கூறியது:

 

ஆராதனை விழாவின்போது புதுப்பிக்கப்பட்ட தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை ஜி.கே. வாசன் திறந்துவைக்கிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள தியாகராஜர் அரங்கத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொடங்கிவைக்கிறார். ஆராதனை விழா ஜனவரி 21 தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார் அவர்.

 

எம்எல்ஏக்கள் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை), பாளை அமரமூர்த்தி (அரியலூர்), முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thursday, January 20, 2011

அரியலூரில் ஃபிப்., 1ல் புதிய கலெக்டர்ஆஃபீஸ் திறப்பு

அரியலூர்:  அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் ஃபிப்ரவரி முதல் தேதி திறந்து வைக்கிறார்.கடந்த 2007 நவம்பர் 23ம் தேதி  துவக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு, 14 கோடி ரூபாய் செலவில் புதிய கலெக்டர் அலுவலகம்  கட்டும் பணி 2009 செப்டம்பர் 30ம் தேதி துவங்கியது.

 

பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா ஃபிப்ரவரி முதல் தேதி மாலை 4மணிக்கு அரியலூரில் நடக்கிறது.தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு தலைமை வகிக்கிறார்.

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி வரவேற்கிறார். மத்தியமைச்சர் நெப்போலியன் முன்னிலை வகிக்கிறார்.அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் ஆஃபீஸ் கட்டிடம், தேளூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், அரியலூர் நகராட்சி அலுவலகத்துக்கான கூடுதல் கட்டிடம், சர்க்யூட் ஹவுஸ் உள்ளிட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து, பலகோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.எம்.எல்.ஏ.,க்கள் அரியலூர் பாளை அமரமூர்த்தி, ஆண்டிமடம் சிவசங்கர், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

NANDRI : WWW.DINAMALAR.COM

 

 

Monday, January 17, 2011

ஜி.கே.மூப்பனார் அரங்கம் மஞ்சமேடு கிராமத்தில் திறப்பு

அரியலூர்: அரியலூர் அருகே மஞ்சமேடு கிராமத்தில் ஜி.கே.மூப்பனார் அரங்க மேடை திறப்புவிழா நடந்தது. அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே மஞ்சமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் திடலில் கட்டப்பட்டுள்ள, ஜி.கே.மூப்பனார் அரங்க மேடை திறப்பு விழாவுக்கு, திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன் தலைமை வகித்தார். மஞ்சமேடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீதப்பிரியன் வரவேற்றார்.

 

அரங்க மேடையை திறந்து வைத்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசினார். விழாவில் திருமானூர் ஒன்றிய கவுன்சிலர் உத்ராபதி, மஞ்சமேடு பஞ்சாயத்து தலைவர் அலமேலு முரளி, துணை தலைவர் சாந்தகுமார், சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவர் ராமையன், காரைப்பாக்கம் கிராம காங்கிரஸ் தலைவர் பிச்சைமணி, கிராம பிரமுகர்கள் மாணிக்கம் மூப்பனார், ஏரக செல்வம், பேராசிரியர் அருணாசலம், போலீஸ் ஏட்டுக்கள் அசோகன், காமராஜ், மார்க்கண்டன், ராஜேந்திரன், குருநாதன், நம்மாழ்வார், கோவிந்தராஜ், சேஷையன், சுப்ரமணியன், கலியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

தொடர்ந்து தஞ்சை சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவின் ஆடல், பாடல், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மஞ்சமேடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்

 

Sunday, January 16, 2011

அரியலூரில் புதிய ஸ்கேன் மைய திறப்பு விழா

அரியலூர்: அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய, யுனைட்டெடு "சிடி' ஸ்கேன் மைய திறப்பு விழாவுக்கு, எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அரியலூர் ஆறுமுகம், லால்குடி எம்.எல்.ஏ., சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். டாக்டர் சங்கர் வரவேற்றார்.

புதிய "சிடி' ஸ்கேன் மையத்தை திறந்து வைத்து அமைச்சர் நேரு பேசியதாவது: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது, மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 15 ஆண்டுக்கு பிறகு இப்போதயை தி.மு.க., ஆட்சியில், தமிழகம் முழுவதும்100க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகளும்திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதனின் சராசரி இறப்பு வயது 30 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது.

நகர் புறங்களில் நல்ல மருத்துவ வசதி இருந்தாலும், புறநகர் பகுதிகளும் மருத்துவ வசதியில் சிறப்பிடம் பெற்று வருகிறது. எங்களை போன்றவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது இந்த அரியலூர் நகரம் தான்.

தமிழக முதல்வரால் அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, வர்த்தக நகரமான அரி யலூர் தொழில் நகரமாகவும் மாறி பல்வேறு தனியார் சி மெண்ட் ஆலைகள் உதயமாகி உள்ளன. அரியலூர் மேம்பாட்டுக்கு என்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், திருமானூர் பஞ்., யூனியன் சேர்மன் நடராஜன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சாந்தி, நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர பொருளாளர் ராஜேந்திரன், வக்கீல் கதிரவன், நகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர்கள் சிவக்குமார், ராஜேந்திரன், நாகராஜன், செந்தில்நாதன், கண்மணி, அகமது ரஃபி, லயன்ஸ் கிளப் தலைவர் பொன்மணி, வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பரமசிவம், அமுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Saturday, January 8, 2011

அரசின் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் கண்காட்சி துவக்கவிழா

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், அரசின் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் கண்காட்சி துவக்கவிழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அன்பழகன் வரவேற்கிறார். அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி தலைமை வகித்து, அரசின் பல்துறை விளக்க முகாமை துவக்கி வைத்துப் பேசுகிறார். சிதம்பரம் எம்.பி., திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், ராஜேந்திரன், பாளை அமரமூர்த்தி முன்னிலை வகிக்கின்றனர்.

 

டி.ஆர்.டி.ஏ., திட்ட இயக்குநர் பெல்லா, சி.இ.ஓ., கார்த்தியாயினி, ஜெயங்கொண்டம் பஞ்., யூனியன் சேர்மன் பரமேஸ்வரி, துணைத் தலைவர் தன சேகர், ஒன்றிய கவுன்சிலர் நீலாவதி பாக்கியராஜ், குழந்தைகள் வளர் ச்சி திட்ட அலுவலர் அன்பரசி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

மரணமடைந்த கருப்பையா உடையார் உடலுக்கு, எம்.எல்.ஏ. பாளை அமரமூர்த்தி அஞ்சலி செலுத்தினர்

அரியலூர்: அரியலூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கருப்பையா உடையார் மரணமடைந்தார். அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா உடையார்(80). உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலேயே மரணமடைந்தார்.

 

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக 1967 சட்டசபை தேர்தலில், அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா உடையாருக்கு மூன்று மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சந்திரமோகன், தற்போதைய தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக உள்ளார்.

 

மரணமடைந்த கருப்பையா உடையார் உடலுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் பாளை அமரமூர்த்தி, சிவசங்கர், ராஜேந்திரன், ராஜ்குமார், தொட்டியம் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் வக்கீல் சின்னப்பா, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் திருமானூர் தனபால் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

ஆரம்ப கல்வி சிறப்பாக அமைந்து விட்டால், மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி தரமாக அமையும்

அரியலூர்: சேனாபதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது. அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, சேனாபதி கிராமத்தில் உள்ள பஞ்.,யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிட திறப்பு விழாவுக்கு, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட சி.இ.ஓ., கார்த்தியாயினி முன்னிலை வகித்தார். கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்து தலைவி ராஜேஸ்வரி ராமச்சந்திரன் வரவேற்றார்.

 

புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிய, கலெக்டர் பொன்னுசாமி பேசியதாவது: இந்த புதிய பள்ளி கட்டிடம் கட்ட, இந்த கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளார். பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் நபர்கள் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில், இதுபோன்ற பரந்த மனப்பான்மை கொண்ட நல்ல மனிதர்கள் சிலரும் உள்ளனர். அத்தகைய கொடை உள்ளம் கொண்ட ஏழை விவசாயி ராமசாமியை மிகவும் பாராட்டுகிறேன்.

 

கிராமப்பகுதி பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் பல்வேறு ஊர்களிலும் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், தேர்ச்சி விகிதம் என்பது வேதனைப்பட வைக்கிறது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சராசரியாக 20 முதல் 25 சதவீதம் மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி விகித அளவுக்கு மார்க் வாங்கியுள்ளனர்.

 

இதே நிலை நீடித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நான் எச்சரிக்கை விடுத்துள்ளேன். நமது மாவட்டத்தில் அனைவரும் படித்து உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற எனது விருப்பத்தை, வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எம்.எல்.ஏ., கோரிக்கைபடி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ், இந்த பள்ளிக்கான சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

 

முன்னதாக விழாவுக்கு தலைமை வகித்த எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது: சமச்சீர் கல்வி, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்கிறது. மேலும் உயர் கல்விக்கான கல்வி கடன், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச புத்தகம், சீருடை, மதிய உணவு, சத்துணவுடன் முட்டை உள்ளிட்ட கல்வி மேம்பாட்டு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆரம்ப கல்வி சிறப்பாக அமைந்து விட்டால், மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி தரமாக அமையும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.

 

கிராம பகுதி மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் தான் இப்போது  தரமான கல்வியை வழங்குகிறது. வேறு எப்போதும் இல்லாத வகையில் திருமானூரில் ஒன்றரை கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கீழக்காவட்டாங்குறிச்சியில் ஒரு கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கிராமத்துக்கு கூடுதல் பஸ் வசதி, விரைவில் கொள்ளிடம் குடிநீர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பாளை அமரமூர்த்தி பேசினார்.

விழாவில், அரியலூர் தாசில்தார் கோவிந்தராஜூலு, திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதியழகன், சித்ரா, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் வக்கீல் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் திராவிடமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்

Monday, January 3, 2011

அரியலூரில் ஜி.கே. வாசன் பிறந்த நாள்


அரியலூரில் ஜி.கே. வாசன் பிறந்த நாள்

 

அரியலூர், டிச. 28: மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசனின் பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானமும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி பாக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.


அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர். கணேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் வி.  சுப்பிரமணியன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜ், குருவாடி ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழாவுக்கு தலைமை வகித்து, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழம், பால், ரொட்டி பாக்கெட்டுகளை சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ்  தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரûஸச் சேர்ந்த சரவணன்ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், வட்டாரத் தலைவர் வீர. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.