Pages

Saturday, September 9, 2017

கட்டுநாட்டு சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கட்டுநாட்டு சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 





Wednesday, February 26, 2014

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் பேர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் திருச்சி, விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் 12 ஆயிரம் பேர் அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழக உறுப்பினர் அட்டைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., I.J.K ஆகிய கட்சிகளில் பணியாற்றி வரும் விழுப்புரம், அரியலூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள்; ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் - 3 பேர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் - 4 பேர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் - 29 பேர் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 125 நிர்வாகிகள்; 800 மகளிர் உள்ளிட்ட 12 ஆயிரம் பேர் கழகத்தில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில் 7 ஆண்டு காலம் விழுப்புரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், 25 ஆண்டு காலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், 1984, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது, மாநில செயற்குழு உறுப்பினர் என கடந்த 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வரும் திரு. எஸ். சிவராஜ் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் திரு. ஆர். தட்சணாமூர்த்தி, வழக்கறிஞர் திரு. சேஷ.லட்சுமிகுமார், ரிஷிவந்தியம் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரத் தலைவர்களான திரு. டி. ராஜேந்திரன், திரு. ஆர். சத்தியமூர்த்தி, உளுந்தூர்பேட்டை வடக்கு வட்டாரத் தலைவர் திரு. அதையூர் கே. பாண்டியன், திருநாவலூர் வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் திரு. வீரா. கருணாமூர்த்தி, திருக்கோவிலூர் பேரூராட்சித் தலைவர் திரு. எம். சரவணன், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்களான, திரு. வி. கோவிந்தராஜ், திரு. என். ஏழுமலை, திருமதி ரத்தினாம்பாள் தனபால், திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான, 1-ஆவது வார்டு திருமதி. எஸ். சண்முகவள்ளி ஜெகநாத், 10-ஆவது வார்டு திரு. ஜி. ரவிக்குமார், 15-ஆவது வார்டு திரு. வி. மோகன்ராஜ், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற 3-ஆவது வார்டு உறுப்பினர் திரு. எஸ். கார்த்திகேயன், திருக்கோவிலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களான, கீழத்தாழனூர் ஊராட்சி திரு. ஜி. ராமகிருஷ்ணன், ஜி. அரியூர் ஊராட்சி திருமதி இ. தமிழரசி, ஆவியூர் ஊராட்சி திரு. பி. தேசிங்குராஜா, கரடி ஊராட்சி திரு. சேகர், கோமாளூர் ஊராட்சி திரு. கே. சபாபதி, மொகலார் ஊராட்சி திரு. ஆர். மனோன்மணி, பழங்கூர் ஊராட்சி கே. மாயவன், பொன்னியந்தல் ஊராட்சி திரு. சாந்தமூர்த்தி, பெரியானூர் ஊராட்சி திரு. சண்முகம், சாங்கியம் ஊராட்சி திரு. கண்ணாயிரம், செங்கணாங்கொல்லை ஊராட்சி திரு. ச. முருகதாஸ், ஜா. சித்தாமூர் ஊராட்சி திரு. திருமலை, எரவலம் ஊராட்சி திரு. செந்தில்குமார், பனப்பாடி ஊராட்சி திரு. ஸ்ரீதரன், ரிஷிவந்தியம் ஒன்றியம், ஊராட்சி மன்றத் தலைவர்களான ஜம்படை ஊராட்சி திரு. டி. சாமிதுரை, திருவரங்கம் ஊராட்சி திருமதி அலமேலு பழனி, பேரால் ஊராட்சி திரு. தேவச்சந்திரன் என்கிற தனுசு, வெங்கலம் ஊராட்சி திரு. விஜயக்குமார், வேளானந்தல் ஊராட்சி திரு. வடிவேல், முகையூர் ஒன்றியம், மேலக்கொண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. டி. சிவக்குமார் என்கிற சிவா மற்றும் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட 400 பெண்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட தலைவராக 12 ஆண்டு காலமும், 1996, 2006 ஆகிய ஆண்டுகளில், இரு முறை அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது, இந்திய தேசிய அரசு போக்குவரத்துத் தொழிலாளர் பேரவைத் தலைவராக பணியாற்றி வரும் திரு. பாளை D. அமரமூர்த்தி தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த அரியலூர் நகரத் தலைவர் திரு. எஸ்.ஆர். ஸ்ரீதர், அரியலூர் வட்டாரத் தலைவர் திரு. ஜி. கோவிந்தராஜ், திருமானூர் வட்டாரத் தலைவர் திரு. த. கோபிநாதன், வட்டாரச் செயலாளர் திரு. ஏ. முத்துச்சாமி, மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ஜெ. சுரேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் திரு. ஏ. வெங்கடாசலம், செந்துறை வட்டாரத் தலைவர் திரு. எஸ். சுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவர் திரு. ஆர். முருகேசன், அரியலூர் நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. ஆர். மகாலிங்கம், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் திரு. HMT. தனபால், அரியலூர் ஒன்றியம், ஊராட்சி மன்றத் தலைவர்களான, ஓட்டக்கோவில் ஊராட்சி திருமதி ஜி. லெட்சுமி, ஸ்ரீனிவாசபுரம் ஊராட்சி திரு. ஆர். தமிழரசன், திருமானூர் ஒன்றியம், கீழக்குளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. மோகன், விழுப்பனங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ஏ. மாலதி கருப்பையன், திருமழப்பாடி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திரு. பி. இளையராஜா மற்றும் திமுக-வைச் சேர்ந்த திருமானூர் ஒன்றியம், வெங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. இரா. மணிமாறன், பா.ம.க-வைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் திரு. ஆர். ஜெயராமன், செயலாளர் திரு. வி. தேவேந்திரன், மாவட்டத் தொண்டர் அணித் தலைவர் திரு. த. துரை, மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் திரு. த. திருமாவளவன், மாநில இளைஞர் அணி முன்னாள் துணைச் செயலாளர் திரு. என்.எஸ். ஜெயக்குமார், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இடையார் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. இ.எஸ். செல்வராஜ், ஆண்டிமடம் ஒன்றியம், மேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. இரா. ராமசாமி, அய்யூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி செல்வராணி நெடுஞ்செழியன், இந்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திருமானூர் ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி நளினி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு. ஆர்.என். வினோத் ராஜ் மற்றும் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட 300 பெண்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர், தத்தமது கட்சியில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், திருச்சி மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராகவும், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழ் நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகவும், திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராகவும், 1984-ஆம் ஆண்டு லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வந்த திரு. கே. வேங்கடாசலம் தலைமையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளர் திரு. எம்.கே. முகமது ரபீக், திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் திருமதி வெ. லாவண்யா பன்னீர்செல்வம், ஸ்ரீரங்கம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் திரு. வெ. கிருஷ்ண ரெங்கநாதன், காங்கிரஸ் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளர்களான திரு. கே.பி. சேதுராமன், திரு. பி. தியாகராஜன், திருச்சி மாவட்ட வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் திரு. எஸ். ஆரோக்கியதாஸ் மற்றும் ஒன்றிய, நகர பேரூராட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 100 பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். ஆக மொத்தம் 800 மகளிர் உள்ளிட்ட 12 ஆயிரம் பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கிய கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, அவர்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தாய் உள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு, தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர். இன்றைய நிகழ்ச்சிக்கு, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பெருந்திரளான அளவில் வந்திருந்தனர். கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு, பேண்டு வாத்தியம் முழங்க, கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளையும், அண்ணா தொழிற்சங்க உடன்பிறப்புகள் தொழிற்சங்கக் கொடிகளையும் கைகளில் ஏந்திய வண்ணம் பெருந்திரளான அளவில் திரண்டிருந்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

Tuesday, September 10, 2013

பெரம்பலூர்-திருமானூரில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா

பெரம்பலூர் பெரம்பலூர் மற்றும் திருமானூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட காங்கிஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையத்தில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்தர்ஹெல்லர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் நகரத்தலைவர் ஆர்.மதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நகர துணைத்தலைவர்கள் இந்திராணி, ஏ.எஸ்.சாதிக்பாட்சா, கவுல்பாளையம் திவ்யநாதன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜ்குமார், வட்டார செயலாளர் வீரமுத்து, பூபதி, எசனை ரெங்கராஜ், ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமானூர் திருமானூர் அருகே உள்ள அரண்மனைக்குறிச்சி கிராம த்தில் முன்னாள் மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.அமரமூர்த்தி தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சிக்கு அரியலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், வட்டார பொறுப்பாளர்கள் கோபி, குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டார துணைத் தலைவர்ராகவன், திருமழபாடி ஊராட்சி துணைத்தலைவர் இளைய ராஜா, ஒன்றியக்குழு உறுப் பினர் கல்யாணசுந்தரம், மற்றும் இமான், சக்திவேல், பாபு, ஞானஜோதி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண் டனர்