அரியலூர், ஆக. 30: அரியலூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 71 ஊராட்சிகளில் 60 ஆயிரம் பேருக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் து. அமரமூர்த்தி தெரிவித்தார்
அரியலூர் அருகேயுள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 434 பேருக்கு இலவச கலர் டிவிக்களை வழங்கி, சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி பேசியது:
அரியலூர் தொகுதியைச் சேர்ந்த 71 கிராம ஊராட்சிகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூர் நகராட்சியில் மூன்று வார்டுகளுக்கு மட்டும் இன்னும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படாமல் உள்ளது. அங்கும் விரைவில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றார் அவர்
விழாவில் திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், துணைத் தலைவர் இரா. கென்னடி, வட்ட வழங்கல் அலுவலர் எம்.எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் பேசினர்.
இதில் ஊராட்சி உறுப்பினர்கள் க. முத்தையன், இரா. ஞானசேகரன், இரா. காமாட்சி, ந. சாமிதுரை, சி. பாஸ்கர் ஊராட்சி உதவியாளர் யா. பாக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊராட்சித் தலைவர் வீ. அன்னலட்சுமி வரவேற்றார். துணைத் தலைவர் எம். சுந்தரி நன்றி கூறினார்.


0 comments:
Post a Comment