Pages

Friday, February 25, 2011

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பொய்யாதநல்லூரில் துவக்க விழா

அரியலூர்: பொய்யாதநல்லூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழா நடந்தது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள குழந்தைவேல் உடையார் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள, தமிழக அரசின் புதிய ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழாவுக்கு, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமை வகித்தார்.

 

இலுப்பையூர் பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் வரவேற்றார். புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி, ஐந்து நபர்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவியும், தமிழக முதல்வரின் பள்ளி சிரார் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் 9 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கி பேசினார்.

 

விழாவில் அரியலூர் பஞ்.,யூனியன் சேர்மன் அருணாபாலு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பால்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகம், நலக்கல்வியாளர் அண்ணாதுரை, மலேசியா மணி, முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பஞ்சாயத்து துணை தலைவர் கோவிந்தராசு நன்றி கூறினார். பொய்யாதநல்லூர் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்க விழாவை முன்னிட்டு, அங்கு சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

Thursday, February 24, 2011

New PHCs brace up health service

Setting vision:Collector T.K. Ponnusamy giving away the spectacle to a student at the inaguration of the primary health center at Elakurichi village on Thursday. Palai D. Amaramoorthy, MLA, is in the picture

ARIYALUR: Four new primary health centres (PHCs) started functioning in Ariyalur district from Thursday.

T. K. Ponnusamy, District Collector, inaugurated the new PHC in Elakurichi village at a function held today. Poyyathanallur, Vananthiraiyandipattinam and Maruthur are the other villages where PHCs started functioning today. Mr. Ponnusamy said the district at present accounted for six PHCs and 30 additional PHCs, including three upgraded PHCs. The government, on the plea of the district administration, has sanctioned four more PHCs to the district.

A sum of Rs.22 lakh was allocated for the construction of buildings for each of the eight new PHCs sanctioned to the district. The construction works of all these PHCs are in progress. The government also earmarked Rs.22 lakh for the construction of building for another PHC, which was not having its own premises.

Referring to the initiative taken by the government for medical facilities in rural areas, Mr. Ponnusamy said mobile medical units have been pressed into service to treat the villagers. They have treated over one lakh people.

Over 240 medical camps have been conducted under the varumon kappom scheme in the district so far and about 77,000 people were identified for having complications and referred for further treatment. A sum of Rs.8.19 crore was spent for treating 3,350 people under the Kalaignar Health Insurance Scheme in the district, he added.

The Collector distributed assistance under the Dr. Muthulakshmi Reddy Maternity Assistance Scheme to five women and also spectacles to ten school students.

Later, the Collector inaugurated the veterinary branch clinic in Vadugapalayam village.

He gave away loans of Rs.20,000 each provided by Bank of India for the purchase of milch animals to 20 beneficiaries on the occasion.

Palai D. Amaramoorthy, MLA, presided over the function. Mohan, deputy director of health; S. R. M. Kumar, chairman, Tirumanoor panchayat union and others spoke.

Thanks to www.thehindu.com

 

Tuesday, February 22, 2011

புதியஆரம்ப சுகாதார நிலையம் பொய்யாதநல்லூரில் இன்று திறப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில் இன்று புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா நடக்கிறது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பொய்யாதநல்லூர் குழந்தைவேலு உடையார் இல்லத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி தலைமை வகித்து, புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசுகிறார்.

 

பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் உடையார் வரவேற்று பேசுகிறார். எம்.பி.,திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள் பாளை அமரமூர்த்தி, சிவசங்கர், டி.ஆர்.ஓ., பிச்சை, முன்னாள் எம்.எல்.ஏ., அரியலூர் ஆறுமுகம், நலப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன், அரியலூர் பஞ்.,யூனியன் சேர்மன் அருணாபாலு, துணை தலைவர் சந்திரா ஜோதிவேல், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜோதிலெட்சுமி பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இலுப்பையூர் பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தராசு நன்றி கூறுகிறார்.

நூல் வெளியீட்டு விழா அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பங்கேற்பு

புதுச்சேரி : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவர் சீனிவாசன் பற்றிய முன்னேறு முன்னேற்று என்ற நூலை, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் வெளியிட்டார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவரும், தொழிலதிபருமான சீனிவாசன் பற்றி, முன்னேறு முன்னேற்று என்ற நூலை எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் எழுதி உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நேற்று நடந்தது. தனலட்சுமி கல்விக்குழும செயலாளர் நீல்ராஜ் வரவேற்றார். புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி நூலை வெளியிட, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.

 

மணிமேகலை பிரசுரம் இயக்குனர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர் மோகன்தாஸ், புதுக்கோட்டை முத்து சீனிவாசன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியன், திருச்சி சிவானி கல்வி நிறுவனத் தலைவர் செல்வராஜ், அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் சேர்மன் சுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

விழாவில் முதல்வர் வைத்திலிங்கம் பேசுகையில், பெரம்பலூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள் பயில மிகப் பெரிய கல்வி நிறுவனத்தை சீனிவாசன் துவக்கி சிறப்பாக நடத்தி வருகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள், தோல்வியைக் கண்டு துவண்டுபோனவர்கள் இந்த நூலைப் படிக்க வேண்டும்.

 

அப்படி படித்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என கூறினார்.தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கதிரவன், இயக்குனர்கள் மணி, பூபதி, நிர்வாக அலுவலர் ராஜசேகர், திருச்சி அபிராமி ஓட்டல் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ.ஜி., மவுரியா, பெரம்பலூர் எஸ்.பி., ரூபேஷ்குமார்மீனா, பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்

பகுதி நேர அங்காடி திறப்பு

அரியலூர், பிப். 21: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கருப்பில்லாக்கட்டளை ஊராட்சியிலுள்ள வண்ணாரப்பேட்டை கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

 

விழாவுக்கு தலைமைவகித்து அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பகுதி நேர அங்காடியை திறந்துவைத்துப் பேசியது:

 

இதுநாள் வரை கல்லக்குடி கிராமத்துக்குச் சென்று ரேஷன் பொருள்களை பெற்று வந்த மக்களின் சுமையை குறைக்கும் வகையில், இப்போது வண்ணாரப்பேட்டையில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

 

மக்களின் தேவையை அறிந்து திட்டங்களைத் தீட்டி, அதை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசுக்கு மக்கள் துணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.  

 

விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ரவிக்குமார், சார்பதிவாளர் சிவகுமார், கள அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் ஒன்றிய திமுக செயலர் ஜோதிவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அறிவழகன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், ஊராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கோவிலூர் ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

விழாவில் பொது விநியோகத் திட்ட சார்பதிவாளர் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

முன்னதாக ஊராட்சித் தலைவர் ஜயலட்சுமி விசுவநாதன் வரவேற்றார். பொய்யூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலர் காமராஜ் நன்றி கூறினார்.

Saturday, February 19, 2011

திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம்

திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம்

 

அரியலூர், பிப். 17: அரியலூர் மாவட்டம், திருமழப்பாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

 

கொள்ளிடத்தின் வடகரையில் புருஷாமிருக மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும்,திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்றதும், நந்தியெம்பெருமாள் சுயசாம்பிகை தேவியாருடன் திருமணம் கொண்டருளியதும் திருமழப்பாடி அருள்மிகு  வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில்தான்.

 

இந்தத் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 9 ஆம் தேதி  தொடங்கியது.

 

இதைத் தொடர்ந்து, அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், சுந்தராம்பிகை  அம்மனும், ஆதிசேஷம், பூதம், கைலாசம், இடபம், யானை வாகனங்களில்  சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 

திருவிழாவின் ஏழாம் திருநாளான பிப்ரவரி 15 ஆம் தேதி திருக்கல்யாண உத்சவமும், எட்டாம் திருநாளான பிப்ரவரி 16 ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதலும் நடைபெற்றன.

 

மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்ட பின்னர், காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். முற்பகல் 11.45 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த திருத்தேர் இரவு நிலைக்கு வந்தடைந்தது.

 

தேரோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், திருமழப்பாடி ஊராட்சித் தலைவர் கர்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாசிமகப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனமும், கொடியிறக்குதலும், பிப். 19 ஆம் தேதி விடையாற்றி உத்சவமும் நடைபெறும்.

 

மாசிமகப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா. சந்திரசேகரன், நிர்வாக அலுவலர் (கூடுதல் பொறுப்பு) தி. முருகேஷ் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Sunday, February 13, 2011

பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட அரியலூர் எம்.எல்.ஏ., கோரிக்கை

அரியலூர்: "அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை காப்பாற்ற, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,'என அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, சென்னையில் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் உள்ளதாவது:

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டசபை தொகுதியில், திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் மூலம்,  30 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களை கொண்டதாகும். இந்தாண்டு பாசனத்துக்காக புள்ளம்பாடி வாய்க்காலில் தாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் பெருமளவு அழிந்து விட்டது. அதையடுத்து மீண்டும் நடவு செய்யப்பட்டுள்ளது. காலம் கடந்து நடவு செய்யப்பட்டதால், பாசனத்துக்கான தண்ணீர் தேவைக்கான காலத்தையும் நீட்டிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

நெல் பயிர்கள் தொண்டை கதிராக இருப்பதாலும், விவசாயத்துக்கான மின்சாரம் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால், மார்ச் மாதம் வரை தண்ணீர் கொடுத்தால் தான், விவசாயிகள் நடவு செய்த பயிரை பாதிப்பு இல்லாமல் அறுவடை செய்ய முடியும். மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லையே என, விவசாயிகள் மிகவும் வருந்துகின்றனர்.

 

எனவே, அரியலூர் மாவட்ட நெல் பயிர்களை பாதுகாக்க, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு, விவசாயிகள் தங்களது வயலில் பயிர் செய்துள்ள வெள்ளாமையை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்க்க உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.<

Monday, February 7, 2011

ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்புவிழா நடந்தது.

அரியலூர்: ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்புவிழா நடந்தது.

 

அரியலூர் அருகே, ஓட்டக்கோவில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கால்நடை கிளை மருத்துவ நிலையம் திறப்பு விழாவுக்கு அரியலூர் கால்நடை பராமறிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் மோகனரங்கன் தலைமை வகித்தார். ஓட்டக்கோவில் பஞ்சாயத்த தலைவி ஜோதி மணிவேல் வரவேற்றார்.

 

புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றியதுடன்,சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார். துவக்கவிழாவில் திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோவிந்தராஜ், டால்மியா சிமெண்ட்ஸ் ஆல்வின், நேரு யுவகேந்திரா கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுண்டக்குடி கால்நடை மருந்த டாக்டர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 

ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இலவச கால்நடை மருத்துவ முகாமில், கால்நடைகளுக்கு ஏற்படும் சப்பை நோய், துள்ளுமாறி நோய் ஆகியவற்றுக்கான 750 கால்நடைகளுக்கு தடுப்பூசியும், 387 கோழிகளுக்கு கோழி கழிச்சல் நோய்க்கான தடுப்பூசியும் போடப்பட்டது. மேலும் 1,980 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 32 கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கமும், 42 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 6 கால்நடைகளுக்கு மலடு நீக்கமும் செய்யப்பட்டது

 

கால்நடை மருத்துவ முகாமில் டாக்டர்கள் பாஸ்கரன், சேகர், குமார், ரெங்கசாமி, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சுப்ரமணியன், புகழேந்தி, ப்ரியா, கால்நடை ஆய்வாளர்கள் துரை, ஆறுமுகம், கால்நடை பராமறிப்பு உதவியாளர்கள் நாகராஜன், செந்துறை ராமலிங்கம், வேப்பூர் ராமலிங்கம், துரைசாமி, வரதராஜன், மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மகளிர்சுய உதவி குழு மூலம் பெண்கள் சொந்த காலில் நிற்கும் மன உறுதியை பெற்று உள்ளனர்;

அரியலூர் விழாவில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா, பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும் விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

 

விழாவுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கினார். மத்திய மந்திரி து.நெப்போலியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசினார்.

 

துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

 

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1500 பேருக்கு வீடுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விழாவிலே 1512 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதி வழங்கப்பட இருக்கிறது. கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டு நாளை முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. கடந்த தி.மு.க.ஆட்சியில் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன.

 

2006-ல் மீண்டும் கழக அரசு அமைந்ததும் முதல்வேலையாக சமத்துவபுரங்களை பராமரிப்பதற்காக ரூ.14? கோடி நிதியை முதல்-அமைச்சர் கலைஞர் ஒதுக்கினார். 2008-2009-ல் 29 சமத்துவபுரங்கள் கட்டி முடித்து திறக்கப்பட்டன. 2009-2010-ல் 30 சமத்துவபுரங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அவற்றிலே ஒன்றை இன்று காலை சேலம் ஆத்தூரில் திறந்து வைத்தேன்.

 

இப்போது திறக்கப்பட்டிருப்பது 21-வது சமத்துவபுரம் இன்னும் மீதி உள்ள 9 சமத்துவபுரங்களும் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும். மீதி உள்ள 36-ம் விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழு மாபெரும் இயக்கமாக கம்பீர நடைபோடுகிறது. இந்த திட்டம் மூலம் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க மன உறுதியை பெற்று உள்ளனர்.

 

 இன்று காலையில் நடைபெற்ற விழாவுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் இதுவரை 1லட்சத்து 88 ஆயிரத்து 156 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியையும், வங்கிக்கடனையும் வழங்கி இருக்கிறேன். இதனை நான் நின்று கொண்டே வழங்குவதற்காக செலவு செய்தது 122 மணிநேரமாகும். இந்தநேரத்தை நான் செலவு செய்ததாக நினைக்கவில்லை பெருமையாகத்தான் கருதுகிறேன்.

 

அதற்கு காரணம் நிதியை பெற்றுச்செல்லும் பெண்களின் முகத்தில் காண்கிற மகிழ்ச்சி எனது உடலில் ஏற்படும் சோர்வைக்கூட பறந்து போகச்செய்துவிடுகிறது. அந்த அளவிற்கு பெண்கள் இந்த ஆட்சி மீதும், ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிற கலைஞர் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கலைஞர் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவதற்கு வருகிற தேர்தலிலும் இந்த ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

 

இவ்வாறு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், ராஜேந்திரன், பாளை.அமரமூர்த்தி, ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் எம்.பி.சிவசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுமுகம்,அரியலூர் ஒன்றியக்குழு தலைவர் அருணாபாலு,பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித்தலைவர் கொடியரசி துரைசாமி, வாலாஜாபுரம் ஊராட்சிமன்றத்தலைவர் தெய்வ.இளையராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெல்லா நன்றி கூறினார்.

 

Wednesday, February 2, 2011

Inaugurating state-of-the-art new collectorate complex

DMK Government has transformed women Self Help Groups into mass movement: Stalin

Ariyalur, Feb 2 : Tamil Nadu Deputy Chief Minster M K Stalin has said the DMK Government, since 1989, has transformed women Self Help Groups (SHG) into a mass movement by providing revolving funds for economic transformation to 1,88,156 groups.

 

Inaugurating state-of-the-art new collectorate complex, built at a cost of Rs 13.75 crore, here last night, he pointed out that people in the state, especially women, desiring the DMK's assumption of power for sixth term was evident by their eagerness to see the completion of various welfare schemes initiated by the government.

 

He said unlike the AIADMK which, during its regime, discontinued people-oriented schemes initiated by Chief Minister M Karunanidhi, the DMK had no reservations in continuing with schemes that benefitted people.

 

Mr Stalin cited the instance of DMK strengthening the noon meal scheme initiated by former chief minister MGR and took a dig at the AIADMK supremo Jayalalithaa for keeping the Samathuvapuram scheme in limbo from 2001 to 2006.

 

''The DMK's focus has all along been to reach out to the needy through pioneering schemes like Anaithu Grama Anna Marumalarchi Thittam and Kalaignar Housing Scheme,'' he said.

 

He personally handed over cheques for revolving funds to the tune of Rs 15.74 crore to 1,512 SHGs and distributed welfare schemes.

 

He also launched several projects at a total value of Rs 123 crore.

 

Palai Amaramoorthy, MLA, and others also spoke on the occasion yesterday.

--UNI

 

Thanks for www.newskerala.com

 

Stalin inaugurates Collectorate complex constructed at Rs.13.75 crore

Providing shelter: Deputy Chief Minister M.K. Stalin handing over the key of house constructed under the Kalaignar Housing Scheme, to a woman in Ariyalur. — Photo:R. Ashok That people in the State, especially women, desiring the DMK's assumption of power for a sixth term is evident by their eagerness to see the completion of the various welfare schemes initiated by the Government, the Deputy Chief Minister M.K. Stalin said on Tuesday.

 

Inaugurating the Rs.13.75 crore state-of-art Collectorate Complex, distributing welfare schemes, and launching several projects at a total value of Rs.123 crore, Mr. Stalin pointed out that unlike the AIADMK which, during its regime, discontinued people-oriented schemes initiated by Chief Minister M. Karunanidhi, the DMK had no reservations in continuing with schemes that benefitted the people.

 

He cited the instance of the DMK strengthening the noon meal scheme initiated by late Chief Minister MGR and took a dig at the AIADMK supremo Jayalalithaa for keeping the Samathuvapuram scheme in limbo from 2001 to 2006. The DMK's focus has all along been to reach out to the needy through pioneering schemes like Anaithu Grama Anna Marumalarchi Thittam and Kalaignar Housing Scheme.

 

The DMK Government has, since 1989, transformed women SHGs into a mass movement by providing revolving funds for economic transformation to 1,88,156 groups, he said. Mr. Stalin personally handed over cheques for revolving funds to the tune of Rs. 15.74 crore to 1,512 SHGS.

 

Likewise, during the four-and-a-half years of its current stint, the DMK government has commissioned new Collectorate complexes in Tirunelveli, Krishnagiri, Salem, Tiruchi, Dharmapuri, and Ariyalur districts. Though the AIADMK denied Ariyalur the status of a district, the DMK revived it in deference to the aspirations of the people in the taluks of Ariyalur, Udayarpalayam and Senthurai. Referring to the requests made earlier by Collector T.K. Ponnuswamy, and VCK leader Thol. Thirumavalavan for fulfilling the pending requirements that are vital for the functioning of the district, the Deputy Chief Minister assured to do the needful. Mr. Stalin, who earlier inaugurated the fourth samathuvapuram in the district at Mannuzhi hamlet in Thelur Panchayat, said 36 more Samathuvapurams will be established for strengthening social quality for 2010-11.

 

The charter of demands listed by Mr. Thirumavalavan and the Ariyalur MLA Palai Amaramoorthy included modernisation of the Government owned cement factory in Ariyalur and making the Jayankondam Lignite Project materialise.

 

Union Minister for Social Justice and Empowerment D. Napoleon also spoke. State Minister for Revenue and Housing I. Periyasami presided over.

அரியலூரில் கோலாகல திறப்பு விழா; பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கலை அழகுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (1-ந்தேதி) மாலையில் நடக்கிறது. துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

 

இந்த விழாவில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் நாளை மாலை பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு காரில் வருகிறார். மாவட்ட எல்லையான அரியலூர் ரெயில்வே கேட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

 

முதலில் அரியலூர் ஒன்றியம் தேளூர் ஊராட்சி மன்னுழியில் சுமார் ரூ.2 1/2 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 

பின்னர் ரூ.1 1/2 கோடியில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையையும், ரூ.13 கோடியில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடத்தையும் ரிப்பன் வெட்டி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு அவர் வருகிறார்.

 

தமிழக வருவாய் துறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடக்கும் விழாவில் கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசுகிறார். மத்திய மந்திரி நெப்போலியன், தொல்.திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாளை அமரமூர்த்தி(அரியலூர்), சிவசங்கர் (ஆண்டிமடம்) ராஜேந்திரன் (ஜெயங்கொண்டம்), மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி, யூனியன் தலைவர் அருணாபாலு, வாலாஜாநகரம் ஊராட்சி தலைவர் தெய்வ இளையராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

 

 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சை, மாவட்ட திட்ட அலுவலர், பெல்லா, நாடாளுமன்ற, சட்டன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசு துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கியும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியும், புதிய கட்டிடங்களை திறந்துவைத்து, வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழா பேருரை ஆற்றுகிறார்.

 

தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அரியலூர் ரெயில்வே கேட்டில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு வி.கைகாட்டி வரையில் இருபுறமும் கொடிகள், தோரணங்கள், மின்விளக்குகள், கட்-அவுட்டுகள், விளம்பர தட்டிகள் அமைக் கப்பட்டுள்ளது. அரியலூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

அரியலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை : காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர்: "அரியலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை துவக்க நடவடிக்கை மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம், அரியலூரில் கட்சியின் மாவட்ட தலைவர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வரும் தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா ஆணைப்படி அமையவுள்ள கூட்டணியை வெற்றிபெற செய்ய, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் பாடுபடுவது. அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி ஆகியவற்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது.

 

பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டு கொள்வது. அரியலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையை உடனடியாக துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக அரசை கேட்டு கொள்வது.

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆஃபீஸ் முன் அமைந்துள்ள ரவுண்டானாவில், ராஜீவ் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். அரியலூர் புறவழிச்சாலை பணிகளை விரைவில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அரியலூர் சட்டசபை தொகுதியில் பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க தமிழக அரசை கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ் மாவட்ட பொதுசெயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

 

கூட்டத்தில், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் வேப்பூர் மோகன், இளவரசன், ஆலத்தூர் அசோகன், ராஜேந்திரன், செந்துறை கொளஞ்சிநாதன், சுப்ரமணியன், அரியலூர் கோவிந்தராஜ், சௌந்தர்ராஜன், திருமானூர் வீரரவி, ஜெயங்கொண்டம் அன்பழகன், தா.பழூர் முருகையன், ஆண்டிமடம் மாணிக்கவேல், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரியலூரில் கோலாகல திறப்பு விழா; பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கலை அழகுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (1-ந்தேதி) மாலையில் நடக்கிறது. துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

 

இந்த விழாவில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் நாளை மாலை பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு காரில் வருகிறார். மாவட்ட எல்லையான அரியலூர் ரெயில்வே கேட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

 

முதலில் அரியலூர் ஒன்றியம் தேளூர் ஊராட்சி மன்னுழியில் சுமார் ரூ.2 1/2 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 

பின்னர் ரூ.1 1/2 கோடியில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையையும், ரூ.13 கோடியில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடத்தையும் ரிப்பன் வெட்டி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு அவர் வருகிறார்.

 

தமிழக வருவாய் துறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடக்கும் விழாவில் கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசுகிறார். மத்திய மந்திரி நெப்போலியன், தொல்.திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாளை அமரமூர்த்தி(அரியலூர்), சிவசங்கர் (ஆண்டிமடம்) ராஜேந்திரன் (ஜெயங்கொண்டம்), மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி, யூனியன் தலைவர் அருணாபாலு, வாலாஜாநகரம் ஊராட்சி தலைவர் தெய்வ இளையராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

 

 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சை, மாவட்ட திட்ட அலுவலர், பெல்லா, நாடாளுமன்ற, சட்டன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசு துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கியும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியும், புதிய கட்டிடங்களை திறந்துவைத்து, வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழா பேருரை ஆற்றுகிறார்.

 

தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அரியலூர் ரெயில்வே கேட்டில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு வி.கைகாட்டி வரையில் இருபுறமும் கொடிகள், தோரணங்கள், மின்விளக்குகள், கட்-அவுட்டுகள், விளம்பர தட்டிகள் அமைக் கப்பட்டுள்ளது. அரியலூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

அரியலூரில் இன்று மாலை பிரமாண்ட விழா: ரூ.13 கோடி செலவில் புதிய கலெக்டர் அலுவலகம் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.13கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (1-ந்தேதி) மாலை 5 மணிக்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் அரியலூரில் நடைபெறுகிறது.

 

கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசுகிறார். மத்திய மந்திரி நெப்போலியன், திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாளை. அமரமூர்த்தி, சிவசங்கர், ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி, யூனியன் தலைவர் அருணாபாலு, கவுன்சிலர் பாண்டியன், வாலாஜாநகரம் ஊராட்சி தலைவர் தெய்வ இளையராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

 

தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகம், பெரியார் நினைவு சமத்துவபுரம், விருந்தினர் மாளிகை, நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

 

மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 1600 மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.1 1/2 கோடியில் கடன் உதவி வழங்கியும் சுமார் 2200 பயனாளிகளுக்கு ரூ.3 1/2 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

 

மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சை, மாவட்ட திட்ட அலுவலர் பெல்லா, போலீஸ் சூப்பிரண்டு நஜ்மல்ஹோடா, நகரசபை தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன்(அரியலூர்), லதாகணேசன் (ஜெயங்கொண்டம்), நகராட்சி செயல் அலுவலர் மோகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபாசந்திரசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், கென்னடி, ஞானமூர்த்தி. ஊராட்சி தலைவர்கள் தமிழரசன், முத்துசாமி, சின்னதம்பி, செல்வராணி, ஜோதிமணிவேல், ராமநாதன், உலகராஜேந்திரன், அறிவழகன், உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

 

விழா முடிவில் மாவட்ட திட்ட அலுவலர் பெல்லா நன்றி கூறுகிறார். விழாக்கோலம் அரியலூருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ரெயில்வே கேட்டிலிருந்து வி.கைகாட்டி வரையில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் கொடிகள், தோரணங்கள், கட்அவுட்கள், வரவேற்பு போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.

அரியலூர் மாவட்ட ஆட்சியரகம், சமத்துவபுரத்தை திறந்துவைத்தார் ஸ்டாலின்

அரியலூர் மாவட்ட ஆட்சியரகம், சமத்துவபுரத்தை திறந்துவைத்தார் ஸ்டாலின்

Last Updated :

 

அரியலூர், பிப். 1: அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியரகத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, நலத் திட்ட உதவிகளை  வழங்கினார்.

 

அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் புறவழிச்சாலை அருகே ரூ.10.29 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டடம், தேளூரில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் ஆகியவற்றை திறந்துவைத்த  தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 43.40 கோடியில் கட்டப்பட்டுள்ள  286 புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தும், ரூ. 45.15 மதிப்பில் கட்டப்பட உள்ள 287 கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 9415 பயனாளிகளுக்கு ரூ. 35.32 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.

 

விழாவுக்கு, மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ.  பெரியசாமி தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் து. நெப்போலியன், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் சட்டப்பேரவை உறுóப்பினர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், கே.  ராஜேந்திரன், பாளை து. அமரமூர்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவி கொடியரசி துரைசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் அருணா பாலு, வாலாஜாநகரம் ஊராட்சித் தலைவர் தெய்வ. இளையராசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரவிக்குமார், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், துரை. சந்திரசேகரன், மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். சிவசுப்பிரமணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அரியலூர் த. ஆறுமுகம், ஒன்றிய திமுக செயலர்கள் அரியலூர் பி. ஜோதிவேல், செந்துறை மு. ஞானமூர்த்தி, அரியலூர் நகர திமுக செயலர் இரா. முருகேசன், மாவட்ட திமுக துணைச் செயலர் எஸ்.வி. சாந்தி, திமுக வழக்குரைஞர் த.ஆ.  கதிரவன், அரியலூர் நகர்மன்றத் தலைவி விஜயலட்சுமி செல்வராஜன், துணைத் தலைவர் வெ. சுப்பிரமணியன், செயல் அலுவலர் (பொறுப்பு) இரா. மோகன், நகராட்சி உறுப்பினர்கள் கா. அமுதலட்சுமி, த. ராமூர்த்தி, ஐ.பி. மணிவண்ணன், இரா. ராமு, எம்.எஸ். சந்திரசேகர், ஆ. தமிழரசன், ஆ. குணா, ஏ.பி.எஸ். பழனிச்சாமி, கோ. தவமணி, பா. சாவித்திரி, நா. பாபு, மு. ராஜா, விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் சங்கச் செயலர் நா. செல்வராசு, சென்னை ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன் கே.எம். காளிமுத்து, ஜி. ஸ்ரீகாந்த், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ஜெ. பெல்லா நன்றி  கூறினார்.

 

Nandri : www.dinamalar.com