தொகுதி விவரம்: அரியலூர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமி. தமிழ்நாட்டிலேயே சிமெண்ட் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்து ஏழு மிகப்பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. சின்ன திருப்பதி என்று கிராம மக்களால் அழைககப்படும் அரியலூர் அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் ஆலயம், தேவாரமி மூவராலும் பாடல் பெற்ற திருமழபாடி ஸ்ரீ வைத்தியநாதசுவாமி ஆலயம், வீராமமுனிவரால் உருவாக்கப்பெற்ற புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆகியவை பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இந்த தொகுதியில் உள்ளன. வேட்டக்குடி பறவைகள் சரனாலயம் சுற்றுலா தலமாக உருவெடுத்து வருகிறது. மருதையாற்றில் ஏற்ப்பட்ட விபத்து மற்றும் நாச வேலை காரணமாக இருமுறை இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய தொகுதி.
தமிழ்தீவிரவாதிகளால் ஒருகாலத்தில் அச்சுருத்தல்கள் ஏற்பட்டு இன்று அமைதியாக உற்பத்தியில் கவனம் செலுத்தும் மாவட்டம். அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர், திருமானூர் என இரண்டு முழுஊராட்சி ஒன்றியங்களும், ஜெயங்கொண்டம், தா.பழூர் என இருஊராட்சிகளில் 20 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. இதில் பெண் வாக்காளர்களே அதிகம் உளளனர், இத்தேர்தலில் 1,06,821 ஆண் வாக்காளர்களும் , 1,08,648 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,15,469பேர் வாக்காளர்களாக உள்ளனர், இச்சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதட்டம் நிறைந்தவை, அதிகம் பதட்டம் ஏற்படுத்தக்கூடியவை, அரசியல் மோதலினால் பதட்டம் ஏற்ப்படுத்தக்கூடியவை என 18வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்ப்படுகள் செய்யப்பட்டுள்ளன, தி.மு.க - அ.தி.மு.க ஆகியவற்றின் கோட்டை என்ற அழைக்கப்படும், இச்சட்டமன்றத் தொகுதியில் 1957 ஆம் வருடத் தேர்தலில் இருந்து இதுவரை தி.மு.க 5 முறையும், அ.தி.மு.க 3 முறையும், காங்கிரஸ் 4 முறையும் ( தா.ம.க 1 முறை ) வெற்றி பெற்றுள்ளன.
இத் தொகுதியில் வன்னியர் 27% உடையார் 24% மூப்பனார் 16% தாழ்த்தப்பட்டோர் 22% மற்றும் இதர வகுப்பினர் தலா 11% சதவீதமும் வாக்காளர்களாக உள்ளனர், தொகுதி சிரமைப்பிற்கு முன்னர் மூப்பனார், உடையார் சமூகத்தினர் அதிகம் இருந்ததால் போட்டியிடும் எதிரெதிர் வேட்பாளர்களாகவும், வெற்றி பெறுபவர்கள் இவர்களின் ஒரு சமூத்தினராகவே இருந்தனர். இந்நிலையில் தற்போது மறுசீரமைப்பால் வன்னியர்கள் அதிக சதவீதத்தில் உள்ளனர். முக்கிய கோரிக்கைகள் திருமானூர் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் காக்க நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும். 1959 -ல் தொடங்கப்பட்ட புள்ளம்பாடி வாய்க்கால், மதகுகள் சீர்படுத்தப்பட்டு செப்பனிட வேண்டும். வழியில் உள்ள குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும். பச்சை மலையில் உருவாகி சிறுவாச்சுரில் தொடங்கி வரும் மருதையாற்று நீர் கொள்ளிடத்திற்கு சென்று வீணாகிறது. இதன் குறுக்கே தடுப்பணை` கட்டி நீரை பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் பல மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு கூட்டுத் குடிநீர்த் திட்டங்களுக்கு ஆழ்கிணறு அமைத்து நீர் எடுத்து செல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பாணைகள் கட்டி நீர்சேகரிப்பை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும். மேலும் பால் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்ற இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாலை சேமித்து வைக்க விளாங்குடியில் அறிவிக்கப்பட்ட பால் குளிருட்டும் நிலையத்தை உடனே தொடங்க வேண்டும், கொள்ளிடக்கரையை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் அளவிற்கு அகலப்படுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
2011-வாக்குப்பதிவு சதவீதம் :68% மாவட்டம் :அரியலூர் மொத்த வாக்காளர்கள்:215469 ஆண் வாக்காளர்கள் :106831 பெண் வாக்காளர்கள் :108638 திருநங்கை வாக்காளர்கள்:0
Nandri : malaimalar.com


0 comments:
Post a Comment