அரியலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாளை.அமரமூர்த்தி தனது வேட்புமனுவை கூட்டணி கட்சியுடனருடன் வந்து ஆர்.டி.ஓ. அலு வலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரனிடம் தாக்கல் செய்தார்.இவர் தனது சொத்துமதிப்பு ரூ.27 லட்சத்து 35 ஆயிரத்து 369 என்று கூறியுள்ளார்.
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாளை. அமரமூர்த்தி நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்களான தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவசங்கர், பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலாளர் பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சிப் பொறுப் பாளர்களுடன் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் எதிரேயுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கார், அண்ணா சிலைகளுக்கு மாலையணிவித்தார்.
பின்னர் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து அரியலூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் பாளை.அமரமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஸ்ரீதரனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாள ராக பாளை.அமரமூர்த்தியின் மனைவி குமுதவல்லி மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான பழனிச்சாமி ஆகியோர் தஙகளது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஸ்ரீதரனிடம் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள பாளை.அமரமூர்த்தி தனது வேட்புமனுவில். அசையும் சொத்துக்களின் மதிப்பாக ரூ. 24லட்சத்து 13ஆயிரத்து 369&ம், அசையா சொத்துக்க ளின் மதிப்பாக ரூ. 3லட்சத்து 22ஆயிரம் மற்றும் கடன் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment