அரியலூர்: அரியலூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட, சுப்ராயபுரம் மற்றும் காவனூர் பஞ்சாயத்தில் நடந்த தமிழக அரசின் இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவுக்கு, தாலுகா வழங்கல் அலுவலர்(பொறுப்பு) தண்டபாணி தலைமை வகித்தார்.சுப்ராயபுரம் பஞ்சாயத்து தலைவர் வேம்பு கொளஞ்சியப்பன், காவனூர் பஞ்சாயத்து தலைவர் சூரியகாந்தி கலியபெருமாள் வரவேற்றனர்.
சுப்ராயபுரம் பஞ்.,க்குட்பட்ட குடும்பங்களுக்கான 906 "டிவி' மற்றும் காவனூர் பஞ்.,க்குட்பட்ட 925 "டிவி' வழங்கி, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது:அரியலூர் சட்டசபை தொகுதியில் இதுவரை 58 ஆயிரத்து 855 "டிவி' வழங்கப்பட்டுள்ளது. சுப்ராயபுரம் மற்றும் காவனூர் பஞ்சாயத்தில் இப்போது வழங்கப்படும் "டிவி'யுடன், அரியலூர் பஞ்., யூனியனில் உள்ள அனைத்து பஞ்.,லும் "டிவி' வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது. திருமானூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட பார்பனச்சேரிக்கு மட்டும் "டிவி' வழங்க வேண்டியுள்ளது.அரியலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு சில வார்டு பயனாளிக்கான 5,800 "டிவி' உள்பட, அரியலூர் சட்டசபை தொகுதியில் இன்னும் 9,000 "டிவி' மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி அரியலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 95 சதவீத மக்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சதவீத குடும்பத்துக்கும் அடுத்த மாதம் "டிவி' வழங்கப்பட்டு விடும்.அடுத்ததாக இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
சுப்ராயபுரம் பஞ்சாயத்துக்கு காஸ் அடுப்பு வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பகுதி நேர ரேஷன்கடை அமைக்கப்பட்டுள்ளது. அதை முழுநேர ரேஷன் கடையாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், மாவட்ட பஞ்.,கவுன்சிலர் அறிவழகன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், துணை தலைவர் வேம்பு கொளஞ்சிநாதன், பஞ்சாயத்து கிளர்க் காசிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், இளைஞர் காங்கிரஸ் லோக்சபா தொகுதி தலைவர் சுப சுந்தரசோழன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோவிந்தராஜ், வட்டார காங்கிரஸ் இளைஞர் அணி துணை தலைவர் பொய்யூர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

0 comments:
Post a Comment