திருமானூர் பகுதிகளில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிப்பு
First Published : 05 Dec 2010 01:50:02 PM IST
அரியலூர், டிச. 4: அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் 277 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சிவானந்தம் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி விழாவில் பங்கேற்று, 92 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசியது:
மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார். விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.
திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு ஊராட்சித் தலைவர் கர்ணனும், கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசனும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மருதபாண்டியனும் தலைமை வகித்தனர்.
இந்தப் பள்ளிகளில் தனித்தனியே நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார். கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 மாணவிகளுக்கும், திருமழப்பாடி பள்ளியில் 65 மாணவ- மாணவிகளுக்கும், ஏலாக்குறிச்சி பள்ளியில் 97 மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாக்களில் திருமழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாகரீகம், கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றன

0 comments:
Post a Comment