பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு
First Published : 29 Nov 2010 01:25:58 PM IST
அரியலூர், நவ. 28: திருமானூர் அடுத்த புதுப்பாளையம் ஆர்.சி. தூயமேரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை குடந்தை ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி கட்டடங்களைத் திறந்துவைத்தார். சகாயமாதா மருத்துவமனை பங்குத் தந்தை தங்கசாமி, புள்ளம்பாடி முதன்மை குரு வின்சென்ட் பெரர், ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பள்ளித் தாளாளர் துரைராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் மெரினாமேரி நன்றி கூறினார்

0 comments:
Post a Comment