Pages

Thursday, December 23, 2010

அரியலூரில் புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

அரியலூர்: அரியலூரில் இரண்டு புதிய வழித்தடங்களுக்கான பஸ் போக்குவரத்து துவக்கவிழா நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, அரியலூரிலிருந்து திருவையாறு வரை நான்குமுறை சென்று வரும் வகையிலான, புதிய வழித்தட டவுன்பஸ் மற்றும் விக்கிரமங்கலம் வழிகாக கொலையனூர் வரை சென்றுவரும் டவுன்பஸ் உள்ளிட்ட புதிய வழித்தட டவுன்பஸ் போக்குவரத்து துவக்கவிழாவுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கோட்ட மேலாளர் சங்கர் தலைமை வகித்தார். அரியலூர் கிளை மேலாளர் ராமநாதன் வரவேற்றார்.

புதிய வழித்தட டவுன் பஸ் போக்குவரத்தை, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், அரியலூர் நகராட்சி துணை தலைவர் சுப்ரமணியன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் சாத்தமங்கலம் ராமையன், பெரியதிருக்கோணம் செல்வி இளங்கோவன், குருவாடி வீரரவி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பழனி, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

0 comments:

Post a Comment