அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.13கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (1-ந்தேதி) மாலை 5 மணிக்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் அரியலூரில் நடைபெறுகிறது.
கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசுகிறார். மத்திய மந்திரி நெப்போலியன், திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாளை. அமரமூர்த்தி, சிவசங்கர், ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி, யூனியன் தலைவர் அருணாபாலு, கவுன்சிலர் பாண்டியன், வாலாஜாநகரம் ஊராட்சி தலைவர் தெய்வ இளையராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகம், பெரியார் நினைவு சமத்துவபுரம், விருந்தினர் மாளிகை, நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 1600 மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.1 1/2 கோடியில் கடன் உதவி வழங்கியும் சுமார் 2200 பயனாளிகளுக்கு ரூ.3 1/2 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சை, மாவட்ட திட்ட அலுவலர் பெல்லா, போலீஸ் சூப்பிரண்டு நஜ்மல்ஹோடா, நகரசபை தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன்(அரியலூர்), லதாகணேசன் (ஜெயங்கொண்டம்), நகராட்சி செயல் அலுவலர் மோகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபாசந்திரசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், கென்னடி, ஞானமூர்த்தி. ஊராட்சி தலைவர்கள் தமிழரசன், முத்துசாமி, சின்னதம்பி, செல்வராணி, ஜோதிமணிவேல், ராமநாதன், உலகராஜேந்திரன், அறிவழகன், உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
விழா முடிவில் மாவட்ட திட்ட அலுவலர் பெல்லா நன்றி கூறுகிறார். விழாக்கோலம் அரியலூருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ரெயில்வே கேட்டிலிருந்து வி.கைகாட்டி வரையில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் கொடிகள், தோரணங்கள், கட்அவுட்கள், வரவேற்பு போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.


0 comments:
Post a Comment