Pages

Tuesday, February 22, 2011

பகுதி நேர அங்காடி திறப்பு

அரியலூர், பிப். 21: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கருப்பில்லாக்கட்டளை ஊராட்சியிலுள்ள வண்ணாரப்பேட்டை கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

 

விழாவுக்கு தலைமைவகித்து அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பகுதி நேர அங்காடியை திறந்துவைத்துப் பேசியது:

 

இதுநாள் வரை கல்லக்குடி கிராமத்துக்குச் சென்று ரேஷன் பொருள்களை பெற்று வந்த மக்களின் சுமையை குறைக்கும் வகையில், இப்போது வண்ணாரப்பேட்டையில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

 

மக்களின் தேவையை அறிந்து திட்டங்களைத் தீட்டி, அதை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசுக்கு மக்கள் துணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.  

 

விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ரவிக்குமார், சார்பதிவாளர் சிவகுமார், கள அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் ஒன்றிய திமுக செயலர் ஜோதிவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அறிவழகன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், ஊராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கோவிலூர் ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

விழாவில் பொது விநியோகத் திட்ட சார்பதிவாளர் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

முன்னதாக ஊராட்சித் தலைவர் ஜயலட்சுமி விசுவநாதன் வரவேற்றார். பொய்யூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலர் காமராஜ் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment