Pages

Friday, February 25, 2011

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பொய்யாதநல்லூரில் துவக்க விழா

அரியலூர்: பொய்யாதநல்லூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழா நடந்தது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள குழந்தைவேல் உடையார் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள, தமிழக அரசின் புதிய ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழாவுக்கு, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமை வகித்தார்.

 

இலுப்பையூர் பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் வரவேற்றார். புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி, ஐந்து நபர்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவியும், தமிழக முதல்வரின் பள்ளி சிரார் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் 9 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கி பேசினார்.

 

விழாவில் அரியலூர் பஞ்.,யூனியன் சேர்மன் அருணாபாலு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பால்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகம், நலக்கல்வியாளர் அண்ணாதுரை, மலேசியா மணி, முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பஞ்சாயத்து துணை தலைவர் கோவிந்தராசு நன்றி கூறினார். பொய்யாதநல்லூர் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்க விழாவை முன்னிட்டு, அங்கு சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

0 comments:

Post a Comment