Pages

Tuesday, February 22, 2011

நூல் வெளியீட்டு விழா அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பங்கேற்பு

புதுச்சேரி : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவர் சீனிவாசன் பற்றிய முன்னேறு முன்னேற்று என்ற நூலை, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் வெளியிட்டார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவரும், தொழிலதிபருமான சீனிவாசன் பற்றி, முன்னேறு முன்னேற்று என்ற நூலை எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் எழுதி உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நேற்று நடந்தது. தனலட்சுமி கல்விக்குழும செயலாளர் நீல்ராஜ் வரவேற்றார். புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி நூலை வெளியிட, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.

 

மணிமேகலை பிரசுரம் இயக்குனர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர் மோகன்தாஸ், புதுக்கோட்டை முத்து சீனிவாசன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியன், திருச்சி சிவானி கல்வி நிறுவனத் தலைவர் செல்வராஜ், அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் சேர்மன் சுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

விழாவில் முதல்வர் வைத்திலிங்கம் பேசுகையில், பெரம்பலூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள் பயில மிகப் பெரிய கல்வி நிறுவனத்தை சீனிவாசன் துவக்கி சிறப்பாக நடத்தி வருகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள், தோல்வியைக் கண்டு துவண்டுபோனவர்கள் இந்த நூலைப் படிக்க வேண்டும்.

 

அப்படி படித்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என கூறினார்.தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கதிரவன், இயக்குனர்கள் மணி, பூபதி, நிர்வாக அலுவலர் ராஜசேகர், திருச்சி அபிராமி ஓட்டல் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ.ஜி., மவுரியா, பெரம்பலூர் எஸ்.பி., ரூபேஷ்குமார்மீனா, பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்

0 comments:

Post a Comment