Pages

Monday, February 7, 2011

ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்புவிழா நடந்தது.

அரியலூர்: ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்புவிழா நடந்தது.

 

அரியலூர் அருகே, ஓட்டக்கோவில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கால்நடை கிளை மருத்துவ நிலையம் திறப்பு விழாவுக்கு அரியலூர் கால்நடை பராமறிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் மோகனரங்கன் தலைமை வகித்தார். ஓட்டக்கோவில் பஞ்சாயத்த தலைவி ஜோதி மணிவேல் வரவேற்றார்.

 

புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றியதுடன்,சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார். துவக்கவிழாவில் திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோவிந்தராஜ், டால்மியா சிமெண்ட்ஸ் ஆல்வின், நேரு யுவகேந்திரா கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுண்டக்குடி கால்நடை மருந்த டாக்டர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 

ஓட்டக்கோவில் கிராமத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இலவச கால்நடை மருத்துவ முகாமில், கால்நடைகளுக்கு ஏற்படும் சப்பை நோய், துள்ளுமாறி நோய் ஆகியவற்றுக்கான 750 கால்நடைகளுக்கு தடுப்பூசியும், 387 கோழிகளுக்கு கோழி கழிச்சல் நோய்க்கான தடுப்பூசியும் போடப்பட்டது. மேலும் 1,980 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 32 கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கமும், 42 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 6 கால்நடைகளுக்கு மலடு நீக்கமும் செய்யப்பட்டது

 

கால்நடை மருத்துவ முகாமில் டாக்டர்கள் பாஸ்கரன், சேகர், குமார், ரெங்கசாமி, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சுப்ரமணியன், புகழேந்தி, ப்ரியா, கால்நடை ஆய்வாளர்கள் துரை, ஆறுமுகம், கால்நடை பராமறிப்பு உதவியாளர்கள் நாகராஜன், செந்துறை ராமலிங்கம், வேப்பூர் ராமலிங்கம், துரைசாமி, வரதராஜன், மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

0 comments:

Post a Comment